Bumrah: ஐபிஎல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இருந்து விலகும் இந்திய வீரர்? ட்விட்டர்
ஸ்போர்ட்ஸ்

Jasprit Bumrah: ஐபிஎல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இருந்து விலகும் வீரர்?

Keerthanaa R

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா இந்த ஆண்டின் ஐபிஎல் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதலே விளையாடாமல் இருக்கிறார் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா. டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன் விலகியது குறிப்பிடத்தக்கது.

நடந்து வரும் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயம் சரியாகாததால், அவர் அணியில் இடம்பெறவில்லை.

இவ்வாண்டு ஜூன் மாதம் நடக்கவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பும்ரா விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் எதிர்பார்த்ததை விட இவரது காயம் தீவிரமாக இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக பும்ரா குணமடையவில்லை என்பதால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகம் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மார்ச் மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரிலும் இவர் பங்குகொள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் 100 சதவிகிதம் குணமடைந்துவிட்ட நம்பிக்கை இன்னும் பும்ராவுக்கு வரவில்லை என பிசிசிஐ மற்றும் என்சிஏ தெரிவித்துள்ளது.

இவ்வாண்டின் பிற்பகுதியில் நடக்கவிருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் ஆசியக் கோப்பை போட்டிகளை இந்திய அணி எதிர்நோக்கியிருப்பதால், பும்ராவுக்கு தேவையான ஓய்வு கிடைக்கட்டும் என அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பும்ரா விளையாடிவருகிறார். சில தினங்களுக்கு முன் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், பும்ராவின் பந்துவீச்சு முறை அவருக்கு தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஒரு வீடியோவில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?