இந்த சாலாவும் கப் போச்சே - துயரத்தில் RCB ரசிகர்கள்; வெளுத்தெடுத்த பட்லர் IPL
ஸ்போர்ட்ஸ்

IPL 2022 : இந்த சாலாவும் கப் போச்சே - துயரத்தில் RCB ரசிகர்கள்; வெளுத்தெடுத்த பட்லர்

இரண்டு தினங்களுக்கு முன்பு நடந்த ஆட்டத்தில் லக்நௌ கடைசி மூன்று ஓவர்களில் சொதப்ப ஹர்ஷல் படேல் புண்ணியத்தில் அரையிறுதி போட்டி என கருதப்படும் குவாலிபயர் 2 ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.

NewsSense Editorial Team

இதோ இந்த ஆண்டு கப் ஜெயிச்சிடுவோம், இதோ அடுத்த ஆண்டு கப் ஜெயிச்சிடுவோம் என ஒவ்வொரு ஆண்டும் ஆர்சிபி ரசிகர்கள் நம்பிக்கையுடன் சொல்வது வழக்கம்.

ஆனால் நீங்க வழக்கம் போல சொல்லுங்க, நாங்க வழக்கம் போல தோத்து வெளியே போயிடுறோம் என்பது போல இந்த சீசனிலும் தோல்வியை தழுவியது ஆர்சிபி.

திண்ணையில் இருந்தவனுக்கு திடுக்குனு அதிர்ஷ்டம் அடிச்சுச்சான் கணக்காக மும்பை டெல்லியை போட்டுத்தள்ளியதால் சீனிலேயே இல்லாத ஆர்சிபி பிளே ஆஃப் வாய்ப்பு பெற்றது.

இரண்டு தினங்களுக்கு முன்பு நடந்த ஆட்டத்தில் லக்நௌ கடைசி மூன்று ஓவர்களில் சொதப்ப ஹர்ஷல் படேல் புண்ணியத்தில் அரையிறுதி போட்டி என கருதப்படும் குவாலிபயர் 2 ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.

நேற்று இரவு ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் குவாலிபயர் 2 ஆட்டத்தில் மோதின. இந்த போட்டியில் ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரில் இருந்து முடியும் வரை எந்தவொரு புள்ளியிலும் ஆர்சிபி முன்னணி வகிக்கவில்லை.

மிக நேர்த்தியாக விளையாடிய ராஜஸ்தான் அணி பெங்களூரு நிர்ணயித்த இலக்கை 11 பந்துகள் மீதம் வைத்து வென்றது.

வின்னிங் ஷாட்டாக சிக்ஸர் அடித்து தனது அணியை இறுதிப்போட்டிக்கு கூட்டிச் சென்றார் ஜாஸ் பட்லர்.

158 ரன்கள் எனும் இலக்கை துரத்தி விளையாடிய ராஜஸ்தான் அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர் மட்டும் 106 ரன்கள் விளாசி அசத்தினார். அவர் மட்டும் நேற்றைய ஆட்டத்தில் பத்து பௌண்டரிகளையும் ஆறு சிக்ஸர்களையும் விளாசினார்.

நேற்றைய தினம் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி சேஸிங்கை தேர்ந்தெடுத்தது. இந்த முறையாவது KGF வீரர்கள் கோலி, கிளென் மேக்ஸ்வெல், டு பிளசிஸ் சிறப்பாக விளையாடுவர்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு KGF படை ஏமாற்றத்தையே பரிசளித்தது.

டிரென்ட் போல்ட் பந்தில் சிக்ஸர் அடித்து ரன் கணக்கை துவக்கிய கோலியை இரண்டாவது ஓவரிலேயே வெளியே ஜாவ் சொன்னார் பிரசித் கிருஷ்ணா.

அதன்பின்னர் ரஜத் பட்டிடர் சிறப்பாக விளையாடியதால் 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்திருந்தது பெங்களூரு.

11வது ஓவரில் டு பிளசிஸ் 27 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆக, அடுத்துவந்த மேக்ஸ்வெல் அதிரடியாக ஆரம்பித்தார் ஆனால் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 13 பந்துகளில் ஒரு பௌண்டரி, இரண்டு சிக்ஸர்கள் விளாசி 24 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த ரஜத்தை அஷ்வின் வீழ்த்தினார். அது தான் ஆட்டத்தின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. 58 ரன்கள் எடுத்த நிலையில் ரஜத் வெளியேறினார். கடைசி நான்கு ஓவர்களில் வெறும் 25 ரன்கள் மட்டுமே எடுத்தது பெங்களூரு.

இதனால் 180 ரன்கள் அல்லது அதற்கு மேல் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆர்சிபியின் ஸ்கோர் 157 ரன்களில் அடங்கியது.

சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே 16 ரன்கள் விளாசி சேஸிங்கை தொடங்கியது ராஜஸ்தான். ஜெய்ஷ்வால் விக்கெட்டை இழந்தாலும் பவர்பிளேவில் மட்டும் 67 ரன்கள் குவித்தது. 10 ஓவர்களிலேயே 100 ரன்களை கடந்தது. 23 பந்துகளில் பட்லர் அரைசதம் கடந்தார்.

12 முதல் 15 வரையிலான நான்கு ஓவர்களில் திடீரென ராஜஸ்தான் ரன்ரேட் மந்தமானது. இந்த நான்கு ஓவர்களில் வெறும் 14 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இந்நிலையில் 16வது ஓவரை ஹஸரங்கா வீச அதில் இரண்டு சிக்ஸர்கள் விளாசி 14 ரன்கள் எடுத்தார் பட்லர். 59 பந்துகளில் சதமடித்த பட்லர் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெறவைத்தார்.

அபாரமாக விளையாடிய பட்லர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

வரும் ஞாயிறு இரவு கோப்பைக்காக குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மல்லுக்கட்டவுள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?