ரஜத் படிதர் Twitter
ஸ்போர்ட்ஸ்

IPL 2022: 49 பந்துகளில் 100 ரன்கள்; RCBயில் அதிரடி காட்டிய இந்த ரஜத் படிதார் யார்?

Antony Ajay R

RCB -ன் வாழ்வா சாவா போட்டியில் சதம் விளாசிய ரஜத் படிதார் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். இன்று லக்னோ அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டி நடைபெற்று வருகிறது. ஆர்.சி.பி-யின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான விராட் கோலி, மேக்ஸ்வெல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். டூ ப்ளஸ்ஸி டக் அவுட் ஆனார். இந்த சூழலில் அணியை கைப்பிடித்து 207 ரன்கள் வரை அழைத்து வந்திருக்கும் இந்த ரஜத் யார்?

கோலி முதல் தினேஷ் கார்த்திக் வரை நட்சத்திர வீரர்களுடன் விளையாடிய படிதார் தனது வான வேடிக்கை மூலம் ஜொலித்தார். படிதார் 28 பந்துகளில் 50 ரன்கள் விளாசி அசத்தினார். 49 பந்துகளில் 100ஐ கடந்தார். ஐபிஎல் பிளே ஆஃப்களில் 100 ரன்கள் அடித்த முதல் அன்கேப்ட் பிளேயர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார் ரஜத்.

மத்திய பிரதேச அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடிவந்திருக்கிறார் ரஜத்.

28 வயதாகும் ரஜத் படிதாருக்கு கடந்த 2014ம் ஆண்டு முட்டியில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிகழ்வு நடைபெறவில்லை என்றால் ஒரு வேளை இப்போது அவரும் ஒரு நட்சத்திர ஆட்டக்காரராக இருந்திருப்பார். 20 வயதில் தொடர்ந்து 2 ஆண்டுகள் விளையாட முடியாமல் போனாலும் கிரிக்கெட் மீதான ஆர்வம் அவரை மீண்டும் மைதானத்துக்குள் அழைத்துவந்தது.

கடந்த ஆண்டு ஆர்சி அணிக்காக முதன் முதலாக ஐபிஎல் -ல் தேர்ந்தெடுக்கப்பட்ட ரஜத், 4 போட்டிகள் களமிறங்க்கி 71 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வந்த லுவ்னித் சிசோடியா காயம் காரணமாக வெளியேறியதால் படிதார் அழைத்துவரப்பட்டார். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு இப்போது தன்னை நிரூபித்துள்ளார்.

சேவாக், ஹர்பஜன் சிங், அமித் மிஸ்ரா, இர்ஃபான் பதான் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் ரஜத் படிதரை பாராட்டியுள்ளனர். இன்றைய போட்டி ரஜத் படிதார் வாழ்வில் முக்கியமானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?