ஐபிஎல் 2022 சீசனின் லீக் சுற்று நிறைவடைய இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது. ஆனால் நேற்றைய தினம் நடந்த போட்டியில் பாயின்டஸ் டேபிளில் ஒரு பெரும் மாற்றத்தை நிகழ்த்தி இருக்கிறது.
நேற்று சென்னை - குஜராத் அணிகள் மோதிய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அபாரமாக விளையாடி வென்றது. இதன் மூலம் 20 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடிப்பதை உறுதி செய்துள்ளது. குஜராத் அணிக்கு இன்னும் ஒரு போட்டி மீதமிருந்தது. அந்த போட்டியில் அந்த அணி தோற்றாலும் அதற்கு கவலை இல்லை. ஏனெனில் இந்த சீசனில் குஜராத்தைத் தவிர வேறு எந்தவொரு அணியும் 20 புள்ளிகள் எடுக்க முடியாத சூழலில் உள்ளன.
நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் லக்நௌ மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் ராஜஸ்தான் வெல்லும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறும் அணிகளில் முதல் மூன்று இடங்கள் லாக் ஆகி விடும் என்பதால் ஆட்டத்தில் எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ். இதன் மூலம் 16 புள்ளிகளைப் பெற்று பாயின்டஸ் டேபிளில் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது. அதிகாரப்பூர்வமாக அந்த அணி இன்னும் பிளே ஆஃப் வாய்ப்பை பெறவில்லை என்றபோதும் நல்ல ரன்ரேட் இருப்பதால் அடுத்த போட்டியில் அதி மோசமான தோல்வியை சந்திக்காமல் இருந்தாலே போதும் ராஜஸ்தான் அணி பிளே ஆஃபுக்கு அதிகாரபூர்வவமாக தகுதி பெற்றுவிடும்.
ஒருவேளை அடுத்த போட்டியில் வெல்லும் பட்சத்தில் 18 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தை தக்கவைக்கும் வாய்ப்பு உள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றில் குவாலிபயர் 1 போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மல்லுக்கட்டும். அதில் வெல்லும் அணி ஃபைனலுக்கு நேரடியாக தகுதி பெறும்.
ஆகவே ராஜஸ்தானுக்கு ஃபைனல் செல்ல இன்னும் தேவை இரண்டே வெற்றிகள் தான்.
நீண்ட நாட்களாக இரண்டாமிடத்தில் நீடித்து வந்த லக்நௌ நேற்றைய தினம் தோல்வியடைந்ததால் ரன்ரேட்டில் சரிவைக் கண்டு மூன்றாமிடத்தைப் பிடித்திருக்கிறது.
இப்போதைய சூழலில் டெல்லி, பஞ்சாப், பெங்களூரு ஆகிய அணிகள் மட்டுமே 16 புள்ளிகள் பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதில் பெங்களூரு மிக மோசமான ரன்ரேட்டில் இருக்கிறது. அந்த அணி தனது கடைசி போட்டியில் குஜராத் அணியைச் சந்திக்கிறது.
டெல்லியும் பஞ்சாப்பும் இன்றைய தினம் மோதவுள்ளன. இதில் தோற்கும் அணி நேரடியாக பிளே ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிடும்.
லக்நௌ அணி தனது கடைசி போட்டியில் கொல்கத்தாவை சந்திக்கிறது. இந்த போட்டியில் வென்றால் அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துவிடும். இல்லையென்றாலும் கூட நல்ல ரன்ரேட் இருப்பதால் லக்நௌ 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது.
குஜராத் ஏற்கனவே பிளே ஆஃபுக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் ராஜஸ்தான், லக்நௌ அணிகள் பிளே ஆஃபுக்கு செல்ல தங்களது கடைசி போட்டியில் வெல்ல வேண்டும். ஒருவேளை தோற்றாலும் கூட இந்த இரு அணிகளும் பிளே ஆஃப் செல்வதில் அப்படி ஒன்றும் பெரிய சிக்கல் இருக்காது.
ஆகவே நான்காவது அணியாக பிளே ஆஃப் செல்லப்போகும் அணி யார் என்பது தான் கேள்வி. இந்த இடத்தை பிடிக்க டெல்லிக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது, அதற்கடுத்து பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு வாய்ப்புண்டு. நூலிழையில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கும் வாய்ப்பு இருக்கிறது.
இந்த வாரம் ட்விஸ்டுகளுடன் முடியப்போகிறதா அல்லது சப்பையாக செல்லப்போகிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp