நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் ஆர்ஆர் அணிகளுக்கு இடையிலான போட்டி கடைசி பந்து வரை விறுவிறுப்பாக சென்றது.
டாஸ் வென்ற சென்னை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பத்தில் ராஜஸ்தான் ஓபனர் ஜாஸ் பட்லர் சிறப்பாக விளையாடினார். ஆனால் இரண்டாவது ஓவரிலேயே ஜெய்ஸ்வால் துஷார் தேஷ்பாண்டேவிடம் விக்கெட்டை இழந்தார்.
படிக்கல்லும் பட்லரும் பவர்பிளேவில் சிறப்பாக ரன்களை சேர்த்தனர். 9வது ஓவரில் ஜடேஜாவிடம் படிக்கல் விக்கெட்டை இழந்தார். அதே ஓவரிலேயே கேப்டன் சஞ்சு சாம்சனும் டக் அவுட் ஆனார்.
ஆட்டம் சிஎஸ்கே பக்கமாக இருந்தது. காற்றை திசை மாற்ற களமிறங்கினார் அஷ்வின். 22 பந்துகளுக்கு 1 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 30 ரன்கள் சேர்த்தார்.
அடுத்ததாக இறங்கிய ஹெட்மேயரும் அதிரடி காட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
சேஸிங் ஸ்பெஷலிஸ்டான் சென்னை அணிக்கு தொடக்கம் தடுமாற்றமானதாகவே இருந்தது. கெய்க்வாட் விக்கெட்டுக்கு பிறகு ஜோடி சேர்ந்த கான்வே, ரஹானே கூட்டணி சிறப்பாக விளையாடியது. 10வது ஓவரில் ரஹானே தனது விக்கெட்டை இழந்தார்.
சிவம் தூபே மற்றும் மொயின் அலி, அம்பத்தி ராயிடு என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து சரிந்தனர்.
கான்வேவும் தனது விக்கெட்டை இழக்க ஃபினிஷிங் ஸ்பெசலிஸ்டுகளான தோனி மற்றும் ஜடேஜா கைக்கு ஆட்டம் வந்தது.
இந்தத் தோல்விக்கான பொறுப்பை பேட்டர்கள்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில், மிடில் ஓவர்களில் (9 ஓவர்கள்) பெரிதாக ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யவில்லை.
ஆனால் எதிர்பார்த்த பவுண்டரிகளோ, சிக்ஸரோ முதலில் வரவில்லை. இதனால் 30 பந்துகளுக்கு 63 ரன்கள் என்றிருந்த நம்பிக்கைக்குரிய இலக்கு 3 ஓவருக்கு 54 ரன்கள் என நெருக்கடியான நிலைக்கு மாறியது.
அடுத்தடுத்த ஓவரில் ஜடேஜாவும் தோனியும் அதிரடி காட்டினர். கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட களத்தில் நின்றார் தோனி. இரண்டு சிக்ஸர்கள் அடித்தாலும் தோனியால் தேவைப்பட்ட ரன்களை எடுக்க முடியவில்லை.
கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை எனும் நிலையில் சிறப்பான யார்கரை வீசி போட்டியை வென்றுதந்தார் சந்தீப் சர்மா.
தோனி ஃபார்மில் இருந்தும் போட்டியை வெல்ல முடியாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. நேற்று விளையாடியது சிஎஸ்கேவின் கேப்டனாக அவரது 200வது போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.
போட்டி முடிந்த பிறகு பேசிய தோனி, "பந்துவீச்சாளர்களின் செயல்பாட்டில் எனக்கு மகிழ்ச்சியே. இந்தத் தோல்விக்கான பொறுப்பை பேட்டர்கள்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில், மிடில் ஓவர்களில் (9 ஓவர்கள்) பெரிதாக ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யவில்லை.
பிட்ச் ரொம்பவே மெதுவாக இருந்து பந்து காற்றில் நின்று வந்திருந்தால் கூட ஓகே. ஆனால், பிட்ச் அந்த அளவுக்கெல்லாம் மோசமாக இல்லை. ராஜஸ்தான் அணியில் அனுபவமிக்க ஸ்பின்னர்கள் இருந்தபோதும் ஸ்கோர் செய்யும் வாய்ப்புகளெல்லாம் இருந்தன. அதை பேட்டர்கள் தவறவிட்டுவிட்டார்கள்." என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை கடிந்துகொண்டார் தோனி.
மேலும் கடைசி ஓவரில் வெற்றியை தவறவிட்டது குறித்து தோனி, "பௌலர் என்ன செய்யப் போகிறார் என்பதை கணிக்க வேண்டும். ஃபீல்டைச் சரியாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும். பௌலர்கள் தவறு செய்யும் வரை காத்திருக்க வேண்டும். தவறே செய்யாமல் நல்ல லென்த்தில் வீசி விட்டார்கள் எனில் பௌலர்களுக்கு அதிர்ஷ்டம். எதோ ஒன்றிரண்டு இன்ச்கள் மிஸ் ஆனால் கூட அட்டாக் செய்துவிட வேண்டும்.
வித்தியாசமான ஃபேன்சி ஷாட்களை நான் ஆடுவதில்லை. பந்தைவலுவாக எதிர்கொள்வதுதான் என்னுடைய பலம். இறுதிக்கட்டத்தில் அப்படியான ஷாட்களைத்தான் ஆட நினைப்பேன்!" எனப் பேசினார்.
200 போட்டி அனுபவத்தைப் பற்றி தோனி, "இது 200 வது போட்டி என்றே வெகு தாமதமாகத்தான் எனக்குத் தெரியும். தனிப்பட்ட மைல்கல் சாதனைகளை எப்போதுமே பெரிதாக எண்ணியதில்லை. அணிக்காக நல்ல தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். 199வது போட்டிக்கும் 200வது போட்டிக்கும் அப்படி என்ன வித்தியாசம் இருந்துவிடப்போகிறது?" எனப் பேசினார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust