RCB vs KKR: ”இந்த தோல்வி எங்களுக்கு தேவைதான்” - என்ன பேசினார் கேப்டன் கோலி? விராட் கோலி
ஸ்போர்ட்ஸ்

RCB vs KKR: ”இந்த தோல்வி எங்களுக்கு தேவைதான்” - என்ன பேசினார் கேப்டன் கோலி?

நாங்கள் புரொஃபஷ்னல் ஆக விளையாடவில்லை. சிறப்பாக பந்து வீசினோம், ஆனால் எங்கள் அணியின் ஃபீள்டிங் மிக மோசமாக இருந்தது

Keerthanaa R

நேற்று சின்னசாமி ஸ்டேடியத்தில் கொல்கத்தா அணியுடன் தோல்வியை தழுவியது பெங்களூரு அணி. போட்டிக்கு பின் பேசிய RCB கேப்டன் கோலி, “இந்த தோல்விக்கு நாங்கள் தகுதியானவர்கள் தான்” என்று கூறியுள்ளார்.

ஐபிஎல் 2023ன் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தன் சொந்த மண்ணில் எதிர்கொண்டது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்தார் ஆர்சிபி அணியின் ஸ்டாண்ட் இன் (தற்காலிக) கேப்டன் விராட் கோலி.

அணிக்கு வலுவான தொடக்கத்தை கொடுத்தனர் ஜேசன் ராய் மற்றும் ஜகதீசன். முதல் விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் சேர்த்திருந்தது இந்த ஜோடி. அடுத்தடுத்து வந்த வீரர்களும் சிறப்பாக விளையாட இருபது ஓவர் முடிவில் 200 ரன்கள் எடுத்தனர்.

இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெஙக்ளூரு அணிக்கு கோலி மட்டுமே நம்பிக்கை அளித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, இலக்கை அடைய முடியாமல், 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது கோலியின் படை.

இரண்டு மோசமான தோல்விகளுக்கு பின், மீண்டும் வெற்றியின் கதவுகளை திறந்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி

இது கொல்கத்தா அணிக்கு எதிராக, சொந்த மண்ணில் ஆர்சிபிக்கு தொடர்ந்து ஐந்தாவது தோல்வி. தவிர, எதிரணியை அதிகமுறை 200 ரன்களை கடக்கவிட்ட அணி என்ற மோசமான சாதனையையும் படைத்துள்ளது பெங்களூரு அணி.

போட்டி முடிந்து பேசிய கேப்டன் கோலி, “உண்மையை சொல்லவேண்டும் என்றால், நாங்கள் போட்டியை அவர்கள் கையில் கொடுத்துவிட்டோம். இந்த தோல்விக்கு நாங்கள் தகுதியானவர்களே.

நாங்கள் புரொஃபஷ்னல் ஆக விளையாடவில்லை. சிறப்பாக பந்து வீசினோம், ஆனால் எங்கள் அணியின் ஃபீள்டிங் மிக மோசமாக இருந்தது” என்றார்.

கொல்கத்தா வீரர் நிதிஷ் ரானா கொடுத்த கேட்சை இரண்டு முறை தவறவிட்டனர் பெங்களூரு அணியினர். இதனால், கிட்ட தட்ட 30 ரன்கள் அதிகமாக கிடைத்தது எதிரணிக்கு.

”விக்கெட் விழுகிற அளவிற்கு பந்துகள் வரவில்லை என்றாலும், தவறான கணிப்புகளால், ஷாட்களால் எங்கள் விக்கெட்களை இழந்தோம். இன்றைய போட்டியில் எங்கு தவறு நிகழ்ந்தது என்பதை ஆராய்ந்து, அதனை சரி செய்ய வேண்டும்.” என்று பேசினார் கோலி.

கொல்கத்தா அணி சார்பில் தமிழ்நாடு வீரர் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்களை வீழ்த்தினார். அவருக்கு மேன் ஆஃப் தி மேட்ச் பட்டம் வழங்கப்பட்டது.

இந்த பட்டத்தை தனக்கு பிறந்துள்ள மகனுக்கு சமர்பிப்பதாக கூறினார் வருண். மேலும், நேற்று ஆட்டம் முடிந்ததும் தான் இன்னும் குழந்தையைப் பார்க்கவில்லை என்றும் கூறினார். இது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?