Chris Gayle Twitter
ஸ்போர்ட்ஸ்

IPL : ஐபிஎல் நிர்வாகம் மரியாதையாக நடத்தவில்லை - கிறிஸ் கெயில் குற்றச்சாட்டு

யுனிவெர்ஸ் பாஸ் என்றழைக்கப்படும் கிறிஸ் கெயில், ஐபிஎல் நிர்வாகம் தனக்கு தகுந்த மரியாதை தராததால் இம்முறை பங்குகொள்ளவில்லை என வெளிப்படையாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

Keerthanaa R
Chris Gayle

இருபது ஓவர் போட்டிகளில், அதிலும் ஐபிஎலில் ஒரு தவிர்க்கமுடியாத ஆட்டக்காரராக இருந்து வந்தவர் மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயில். பேட்டிங் பவுலிங் என பன்முகத் திறமை கொண்ட இவர் 2022 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் இடம்பெறாதது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெறும் ஏமாற்றத்தைத் தந்தது.

2009ஆம் ஆண்டு அணிக்காக ஐபிஎல் தொடரில் முதன்முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகப் பங்கேற்றார் கெயில். அதன் பின்னர், 2011-ல் ராயல் சேலஞ்செர்ஸ் பெங்களூரூ மற்றும் 2018-ல் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடினார். கடைசியாக இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் சார்பாக பங்குகொண்டார். இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கெயில், ஏலத்தில் தன் பெயரை தராதது பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு வேளை இவர் 20-ஓவர், ஐபிஎல் தொடர்களிலிருந்தும் ஓய்வு பெறுகிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உழன்றுகொண்டிருக்க, திடுக்கிடும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் இந்த உயர்ந்த மனிதர்.

Chris Gayle

இந்தியன் ப்ரீமியர் லீக் நிர்வாகம் தனக்குத் தகுந்த மரியாதை தரவில்லை என்றும், இவ்வளவு ஆண்டுகளாக இந்த போட்டிக்காக நிறைய செய்துவிட்ட பிறகும் மரியாதை இல்லை என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக லண்டன் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரை சரியாக கவனிக்கவில்லை என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

"சரி, இந்த அளவு ஐபிஎலுக்கும், இந்த விளையாட்டிற்கும் என்னால் முடிந்தவற்றை தந்த பிறகும் எனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனால் இதில் பங்கேற்க நானும் பெரிதாக கண்டுகொள்ள போவதில்லை என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்", என்ற யுனிவெர்ஸல் பாஸ், "கிரிக்கெட்டைத் தாண்டியும் வாழ்க்கையுள்ளது. அதனால் இந்த புதிய இயல்பிற்கு என்னை நான் பக்குவப்படுத்திக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்" என்றும் குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டு ஐபிஎலில் பங்கேற்பீர்களா என்று கேட்டதற்கு, தான் மிகவும் விரும்பும் பெங்களூரு அல்லது, பஞ்சாப் அணிகளில் ஒன்றிற்காக விளையாடி கோப்பையை பெற்றுத் தர விரும்புவதாகவும் தெரிவித்தார். இதுவரை 142 போட்டிகளில் விளையாடி, 4,965 ரன்கள் குவித்துள்ளார் கெயில். அதிகபட்சமாக 175 ரன்கள், 6 சதங்கள், 31 அரைசதங்கள் மற்றும் இவரது சராசரி 39.72 ஆக உள்ளது.

தனது கடைசி போட்டியை ஜமைக்காவில் ஆட விரும்புவதாக மனம் திறந்துள்ளார் கெயில்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?