Kane Williamson ட்விட்டர்
ஸ்போர்ட்ஸ்

Kane Williamson: காயம் காரணமாக உலகக்கோப்பையை மிஸ் செய்யும் நியூசிலாந்து கேப்டன்?

போட்டியின்போதே அவர் விலகினார். சிறிது ஓய்வுக்கு பிறகு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காயத்தின் தீவிரம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்தே வில்லியம்சன் விலகினார். இவருக்கு பதிலாக இலங்கை வீரர் தசுன் ஷனகாவை அணியில் இணைக்கவுள்ளதாக குஜராத் அணி தரப்பில் கூறப்பட்டுள்ளது

Keerthanaa R

முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் இருந்து விலகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் 31ஆம் தேதி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தொடங்கின. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

அப்போது சென்னை அணி வீரர் ருதுராஜ் சிக்சருக்கு விளாசிய பந்தை பவுண்டரி லைன் பக்கம் நின்றிருந்த வில்லியம்சன் தடுக்க முயன்றார்.

பந்தை பிடித்து தூக்கிவீசியவர், கீழே விழுந்ததில், அவரது வலது கால் மூட்டுப்பகுதியில் காயம் ஏற்பட்டது.

இதனால் போட்டியின்போதே அவர் விலகினார். சிறிது ஓய்வுக்கு பிறகு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காயத்தின் தீவிரம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்தே வில்லியம்சன் விலகினார். இவருக்கு பதிலாக இலங்கை வீரர் தசுன் ஷனகாவை அணியில் இணைக்கவுள்ளதாக குஜராத் அணி தரப்பில் கூறப்பட்டுள்ளது

இந்நிலையில், கேன் வில்லியம்சன் அக்டோபர்- நவம்பர் மாதங்களில் நடக்கவிருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பையிலும் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

”வலது கால் மூட்டுப்பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக கேன் வில்லியம்சனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. கடந்த செவ்வாயன்று ஸ்கேன் செய்த போது அவரது முழங்காலில் முன்புற சிலுவை வடிவ தசைநாரில் (anterior cruciate ligament - முழங்காலை உறுதியாவைத்திருக்கும் முக்கிய தசைநார்) சிதைவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது”

அடுத்த மூன்று வார காலத்திற்குள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. சிகிச்சைக்கு பின்னர் அவர் உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்குள் உடற்தகுதி பெறுவாரா என்பது சந்தேகம் தான். இதனால் நியூசிலாந்து அணி வேறு தலைமையின் கீழ் விளையாடும்.

இது குறித்து பேசிய வில்லியம்சன், “இது போன்ற காயங்களால் விளையாடமுடியாமல் போவது ஏமாற்றமளிக்கிறது தான்.

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் நியூசிலாந்து அணி, இந்த சமயத்தில் எனக்கு அளிக்கும் ஆதரவுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.

ஆனால் தற்போது எனது கவனம் அறுவை சிகிச்சையை மேற்கொண்டு, காயத்திலிருந்து மீள்வது தான். என்னால் முடிந்த ஆதரவை நியூசிலாந்து பயிற்சியாளர் கேரிக்கும், எனது அணியினருக்கும் நான் வழங்குவேன்” என தெரிவித்துள்ளார்.

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, 2019 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி, 2021 டி20 உலகக்கோப்பை இறுதி போட்டிகளில் விளையாடியுள்ளது.

மேலும் 2021ல் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நியூசிலாந்து அணி வென்றதும் இவர் தலைமையில்தான்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?