Dhoni: மும்பை வான்கடே மைதானத்தில் ‘தல’ தோனிக்கு சிலை - எப்போது திறப்பு விழா? ட்விட்டர்
ஸ்போர்ட்ஸ்

Dhoni: மும்பை வான்கடே மைதானத்தில் ‘தல’ தோனிக்கு சிலை - எப்போது திறப்பு விழா?

தோனி அடித்த சிக்ஸர் ஷாட்டை தான் சிலையாக வடிவமைக்க மும்பை கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்துள்ளது. இச்சிலை தோனி அடித்த பந்து விழுந்த இடத்தில் வைக்கப்படவுள்ளது.

Keerthanaa R

2011 உலகக்கோப்பையின் போது எம் எஸ் தோனி அடித்த வின்னிங் ஷாட் சிக்ஸரை நினைவுக்கூரும் விதமாக அவருக்கு சிலை வைக்க மும்பை கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.

1983ல் இந்திய அணி முதன்முறையாக உலகக்கோப்பையை வென்றது. அப்போது இந்திய அணியை கபில் தேவ் வழிநடத்தினார்.

28 ஆண்டுகளுக்கு பின் 2011 ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி இந்தியா உலகக்கோப்பையை இரண்டாவது முறை வென்றது.

இந்நிலையில், தலைமையகத்தில் கடந்த திங்களன்று நடந்த கூட்டத்தில், இந்திய அணியின் வெற்றியை நினைவுக்கூரும் விதமாக 2011 உலகக்கோப்பையின் முக்கிய தருணத்தை சிலையாக வடிவமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

2011 உலகக்கோப்பை இறுதியாட்டத்தில், இந்தியா இலங்கை அணிகள் மோதின. போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது.

இதில் முதலில் விளையாடிய இலங்கை அணி 274 ரன்கள் எடுத்திருந்தது.

இரண்டாவதாக களமிறங்கிய இந்திய அணிக்கு யுவராஜ் சிங், கௌதம் கம்பீர் மற்றும் அப்போதைய இந்திய அணி கேப்டன் எம் எஸ் தோனி ஆகியோர் நட்சத்திர வீரர்களாக திகழ்ந்தனர். தோனி அந்த போட்டியில் 91 ரன்களை குவித்திருந்தார்.

கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றிபெற செய்தார் தோனி.

தோனி அடித்த சிக்ஸர் ஷாட்டை தான் சிலையாக வடிவமைக்க மும்பை கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்துள்ளது.

இச்சிலை தோனி அடித்த பந்து விழுந்த இடத்தில் வைக்கப்படவுள்ளது. மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அமோல் கேல் இது குறித்து கூறுகையில்,

“பந்து சரியாக எந்த இருக்கையில் விழுந்தது என எங்களுக்கு தெரியாது. இதனால், தோராயமாக அந்த இடத்தில் இருக்கும் 3 அல்லது 4 இருக்கைகளை தேர்வு செய்து, அதை அகற்றி, அவ்விடத்தில் சிலையை நிரந்தரமாக வைக்க முடிவுசெய்துள்ளோம்”

”எங்கள் மனதில் ஒரு விதமான டிசைன் இருக்கிறது. அக்டோபர் நவம்பர் மாதங்களில் இந்த ஆண்டின் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் தருவாயில் இச்சிலை செய்து முடிக்கப்பட்டிருக்கும்.

இந்த ஐடியாவை நான் முன்மொழிந்தேன், பிறகு எம் சி ஏவின் செயலாளர் அஜின்கியா நாயக்கும் ஆமோதித்தார். அதன் பிறகு தலைமையகம் நிறைவேற்றியது “ என்றார் அமோல்.

இச்சிலையை தோனி தன் கையாலேயே திறந்து வைக்க அவரிடம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மும்பை கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது.

முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கும் வான்கடே மைதானத்தில் முழு உருவச்சிலை வைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?