MI Twitter
ஸ்போர்ட்ஸ்

IPL 2022 : மும்பையின் மரண அடியில் சென்னையின் கனவு தகர்ந்தது | CSK vs MI

NewsSense Editorial Team

மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இதன் மூலம் இந்த சீசனில் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த இரண்டாவது அணியாகியுள்ளது சென்னை.

நேற்றைய தினம் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று சேஸிங்கைத் தேர்ந்தெடுத்தது. சென்னை பேட்ஸ்மேன்களுக்கு முதல் ஓவரிலேயே பெரும் அதிர்ச்சி கொடுத்தார் டேனியல் சாம்ஸ்.

ஆம், முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே டேவிட் கான்வாய் அவுட் ஆனார். மின்சாரம் இல்லாததால் டிஆர்எஸ் ரிவ்யூ கேட்கமுடியாததால் தனக்கு கொடுக்கப்பட்ட அவுட்டை மேல் முறையீடு செய்ய முடியாமல் வெளியேறினார் கான்வாய்.

மும்பை அணிக்கு இரண்டாவது பந்திலேயே லக் அடித்தது. அதே ஓவரில் மொயின் அலி விக்கெட்டையும் தூக்கினார் சாம்ஸ்.

மூன்று வைடு, இரண்டு விக்கெட்டுகள் என முதல் ஓவரை சாம்ஸ் அமர்க்களமாக வீச, அங்கிருந்து சென்னை சரிய துவங்கியது.

இரண்டாவது ஓவரில் பும்ரா பந்தில் உத்தப்பா அவுட் ஆனபோது மூன்று விக்கெட்டுகளை இழந்து வெறும் ஐந்து ரன்களை எடுத்திருந்தது சென்னை அணி.

dhoni

ஐபிஎல்லின் மிகக்குறைந்த பட்ச ஸ்கோரான 49 ரன்களையாவது தாண்டுமா என பெரும் கேள்வி எழுந்தது.

ஐந்தாவது ஓவரில் ருதுராஜ் விக்கெட்டை சாம்ஸ் மாம்ஸ் கைப்பற்றியபோது ஸ்கோர் 17/4

அப்போது தோனி களமிறங்கினார். பவர்பிளே முடியும் தருவாயில் நானும் பெவிலியன் போறேன் பாஸ் என ராயுடுவும் நடையை கட்டினார். பவர்பிளே முடிவில் 32 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தது சென்னை அணி.

எட்டாவது ஓவரில் துபேவும் நடையை கட்ட, 39 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகள்.

சென்னை ரசிகர்களுக்கு ரத்த கண்ணீர் வராத குறைதான். மும்பையின் மரண அடியை சமாளித்து தோனி மட்டும் தனி ஆளாக போராடினார்.

பிராவோ கொஞ்ச நேரம் சமாளித்துப் பார்த்தார். எக்ஸ்டிரா வகையில் 15 ரன்கள் கிடைத்தும் 100 ரன்களை கூட எடுக்க முடியவில்லை.

16 ஓவர்கள் முடிவில் ஆல் அவுட் ஆனது சென்னை சூப்பர் கிங்ஸ். தலைவன் தோனி மட்டும் 33 பந்துகளில் நான்கு பௌண்டரிகள், இரண்டு சிக்ஸர்களோடு 36 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

திலக் வர்மா, ஹ்ரித்திக் ஷோகீன்

98 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது மும்பை. முதல் ஓவரிலேயே இஷான் கிஷனை வெளியேற்றினார் முகேஷ்.

பௌண்டரிகளாக விளாசி கொண்டிருந்த ரோகித்தை சிமர்ஜித் சிங் அடக்கினார்.

ஐந்தாவது ஓவரை வீசிய முகேஷ் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அப்போது 33 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

தூரத்தில் சென்னைக்கு வெற்றிக்கான ஒரு ஒளி தெரிந்தது. ஆனால் திலக் வர்மா அபாரமாக நிதானமாக விளையாடி மும்பையை 15வது ஓவரிலேயே கரை சேர்த்தார்.

ஐபிஎல் பாயின்டஸ் டேபிளை பொறுத்தவரையில் யாருக்கும் பிரயோஜனம் இல்லாத வகையில் இந்த ஆட்டம் முடிந்துள்ளது. ஐந்து முறை கோப்பையை வென்ற மும்பை கடைசி இடத்தில தொடர்கிறது. நான்கு முறை கோப்பையை வென்ற சென்னை மும்பையை விட ஒரு இடம் முன்னதாக இருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?