mumbai indians Twitter
ஸ்போர்ட்ஸ்

அடிச்சது அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்: டெல்லியை வதம் செய்த மும்பை - RCB உள்ளே

NewsSense Editorial Team

நேற்றைய தினம் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் சோஷியல் மீடியா பேஜில் Profile Picture-ஐ நீல நிறத்துக்கு மாற்றி இருந்தார்கள். மேட்ச் பார்க்க வந்தவர்களின் மும்பை மற்றும் டெல்லி ரசிகர்களை விட பெங்களூரு ரசிகர்களே அதிகமாய் இருந்தார்கள்.

இதற்கெல்லாம் காரணம் நேற்றைய ஆட்டத்தில் மும்பை டெல்லியை வீழ்த்தினால் பெங்களூரு பிளே ஆஃப் தகுதி பெறும் என்பதற்காகத் தான். ஆனால் இதைவிட மும்பைக்கு இன்னொரு காரணம் இருந்தது.

நான்காண்டுகளுக்கு முன்பு அதாவது 2018 சீசனில் மும்பை அணி தனது கடைசி போட்டியில் வென்றால் பிளே ஆஃப் செல்ல முடியும் எனும் சூழல் நிலவியது. அப்போது புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திலிருந்த டெல்லி அணி தனது கடைசி போட்டியில் மும்பையை எதிர்கொண்டது.

Mumbai Indians vs Delhi Capitals

அந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றதால் மும்பையின் பிளே ஆஃப் கனவு கலைந்தது. வாழ்க்கை ஒரு வட்டம் என விஜய்னா சொல்வது போல, நேற்றைய தினம் வெற்றி பெற வேண்டிய அவசியத்தில் டெல்லி அணியும், பாயின்டஸ் டேபிளில் கடைசி இடத்தில் மும்பை அணியும் இருந்தன.

ஆனால் டெல்லி அணியை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை பழிதீர்த்துக் கொண்டது, பெங்களூரு அணி மும்பையின் வெற்றி காரணமாகக் கடைசி நேரத்தில் பிளே ஆஃப் வண்டியில் ஏறியது.

நேற்றைய ஆட்டத்தில் டெல்லி முதலில் பேட்டிங் செய்தது. முதல் விக்கெட்டை டேனியல் சாம்ஸ் எடுத்தார். வார்னர் வீழ்ந்ததும் மிச்செல் மார்ஷ் வந்தார். பும்ரா வீசிய பந்தில் கோல்டன் டக் ஆகி வெளியேறினார் மார்ஷ்.

பவர்பிளேவின் இறுதி ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் பிரித்வி ஷா விக்கெட்டை வீழ்த்தினார். மூன்று முக்கியமான பேட்ஸ்மேன்களை இழந்த நிலையில் பவர்பிளே முடிவில் 37 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது டெல்லி.

மார்கண்டே பந்தில் சர்பிராஸ் கான் வீழ்ந்தபோது டெல்லியின் ஸ்கோர் 50 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள். பெங்களூரு ரசிகர்கள் ஆர்பரித்தார்கள்.

ஆனால் அதன் பின்னர் ஜோடி சேர்ந்த பந்த் மற்றும் பாவெல் ஜோடி மெல்ல அணியை மீட்டது. குறிப்பாக ஆட்டத்தின் 12வது ஓவர் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஹ்ரித்திக் ஷோக்கேன் வீசிய அந்த ஓவரில் இரண்டு சிக்ஸர்கள், ஒரு பௌண்டரி என 20 ரன்கள் குவித்து அசத்தினார் பாவெல்.

15 ஓவர்களில் 100 ரன்களை கடந்து, பதினாறாவது ஓவரில் 19 ரன்கள் விளாசிய நிலையில் பந்த் விக்கெட்டை இழந்தது டெல்லி.

சற்றே ஆட்டம் காண்பித்த பாவெலை தனது கடைசி ஓவரில் வீழ்த்தினார் பும்ரா.

Delhi Capitals

பந்த் - பாவெல் ஆடிய பொறுப்பான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் எடுத்தது டெல்லி.

கடைசி 10 ஓவர்களில் டெல்லி சிறப்பாக விளையாடியதால் பெங்களூரு பதற்றத்திலிருந்தது.

அந்த பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் சேஸிங்கில் ரோகித் ஷர்மா விளையாடினார். ஆம், ஒரு ரன் அடிப்பதற்கு கூட மிகவும் சிரமப்பட்ட அவர் தான் சந்தித்த 10வது பந்தில் தான் முதல் ரன்னையே எடுத்தார்.

பவர்பிளேவின் கடைசி ஓவரில் 13 பந்துகளில் இரண்டு ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோகித் அவுட் ஆனார். ஆறு ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது மும்பை.

டெல்லி அணியின் கை ஓங்கியிருந்ததால் ஆர்சிபி வீரர்களும் ரசிகர்களும் நகத்தை கடிக்க தொடங்கினர்.

குல்தீப் வீசிய 10வது ஓவரில் 18 ரன்கள் குவித்தது பிரீவிஸ் மற்றும் இஷான் கிஷன் ஜோடி. அப்போதுதான் மும்பைக்கு கொஞ்சம் ஆக்சிஜன் கிடைத்தது.

ஆனால் இஷான் கிஷனை தனது அடுத்த ஓவரில் வீழ்த்தினார் குல்தீப். ஆட்டத்தின் 15வது ஓவரை ஷர்த்துல் தாக்கூர் வீசினார். இந்த ஓவரில் மூன்றாவது பந்தில் ப்ரீவிஸ் போல்டானார்.

இதைத்தொடர்ந்து டிம் டேவிட் களமிறங்கினார். தனது முதல் பந்திலேயே கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். அவரும் பிடித்தார். ஆனால் அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. துரதிருஷ்டவசமாக டெல்லி கேப்டன் ரிவ்யூ கேட்கவில்லை. ஆனால் அது அவுட் என்பது டிவியில் பின்பு தெரிந்தது.

முதல் பந்தில் தப்பிப்பிழைத்த டிம் டேவிட் பின்னர் வெளுத்து வாங்கினார். அந்த ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு வைத்து மும்பை 100 ரன்களை கடக்க உதவினார்.

11 பந்துகளில் நான்கு சிக்ஸர்கள், இரண்டு பௌண்டரிகள் 34 ரன்கள் எடுத்து மீண்டும் தாக்கூர் பந்தில் அவுட் ஆனார். ஆனால் அதற்குள் டெல்லியின் வெற்றி வாய்ப்பை மழுங்கடித்துவிட்டார்.

ஐந்து பந்துகள் மீதம் வைத்து மும்பை வென்றது. அதிர்ச்சியில் உறைந்தது டெல்லி அணி.

mumbai indians

சென்னை மற்றும் மும்பை அணிகள் எட்டு புள்ளிகளை பெற்றிருந்தபோதிலும் ரன்ரேட் அடிப்படையில் மும்பை கடைசி இடத்தை பிடித்தது.

மும்பையின் புண்ணியத்தில் பிளே ஆஃப் சென்றுள்ள பெங்களூரு அணி எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்நௌ அணியை சந்திக்கிறது.

லீக் சுற்றில் லக்நௌ அணியை பெங்களூரு வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த முறையாவது பெங்களூரு ரசிகர்களுக்கு ஈ சாலா கப்தே நம்து ஆகிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?