FIFA 2022: கத்தாரின் ஸ்டேடியம் 974 உலகக் கோப்பைக்கு பின் காணாமல் போகுமா?- விரிவான தகவல்கள் Facebook
ஸ்போர்ட்ஸ்

FIFA 2022: கத்தாரின் ஸ்டேடியம் 974 உலகக் கோப்பைக்கு பின் காணாமல் போகுமா?- விரிவான தகவல்கள்

Antony Ajay R

கால்பந்து உலகக் கோப்பை 2022 போட்டியை நடத்தி வருகிறது கத்தார்.

இந்த போட்டிகள் மொத்தமாக 8 ஸ்டேடியம்களில் நடைபெற்று வருகிறது.

சாதாரண கால்பந்து மைதானங்களுக்கும் கத்தாரின் மைதானங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

அந்த பாலைவன நாட்டின் வெளுத்துகட்டும் வெப்பத்தில் வீரர்கள் சோர்வாகாமல் சாதாரணமாக விளையாட நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவைக் குறித்து கீழ் வரும் கட்டுரையில் பார்க்கலாம்.

உலகக் கோப்பை 2022: பாலைவனத்தை குளிர்ச்சியான மைதானமாக மாற்றும் கத்தார் - எப்படி சாத்தியம்?

உலகக் கோப்பை போட்டிகளைத் தொடங்கியது முதல் பல சர்ச்சைகளை சந்தித்துவரும் கத்தார், ஒரு ஸ்டேடியத்தினால் பல தரப்பிலிருந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

அது என்ன ஸ்டேடியம் அதன் சிறப்பு என்ன என்பதைப் பார்க்கலாம்.

என்ன சிறப்பு?

ஸ்டேடியம் 974 எனும் அந்த ஸ்டேடியம் எளிதாக பிரித்து மீண்டும் பொருத்திக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே இந்த ஒரு ஸ்டேடியத்தில் மட்டுமே இந்த வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது மறுசுழற்சி செய்யப்பட்ட கப்பல் கன்டெயினர்களைப் பயன்படுத்தியே உருவாக்கப்பட்டுள்ளது.

கத்தார் 974 - பெயர் காரணம் என்ன?

இந்த ஸ்டேடியத்துக்கு ரஸ் அபு அபுத் எனப் பெயர் வைக்க திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் ஸ்டேடியம் 974 என்ற பெயர் வைக்கப்பட்டதற்கு பின்னால் சில வாவ் காரணங்கள் இருக்கிறன.

இந்த ஸ்டேடியத்தை உருவாக்க மொத்தமாக 974 கன்டெயினர்களை உபயோகப்படுத்தியிருக்கின்றனர்.

அது மட்டுமின்றி 974 கத்தாரின் சர்வதேச டயலிங் குறியீடு என்பதும் குறிப்பிடத்தக்கது.

கத்தார் 974 உருவாக காரணம் என்ன?

இந்த ஸ்டேடியம் உருவாக ரஷ்யாவின் கலினின்கிராட் ஸ்டேடியம் முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. ஆனால் அது முன்னோடியாக இருந்தது என்று கூற முடியாது.

ரஷ்யாவில் ஒரு தீவின் மீது, டன் கணக்கான மணலைக் கொண்டு நிரப்பி கட்டப்பட்டது கலினின்கிராட்.

இது சுற்றுச்சூழல் ஆர்வாலர்களிடம் பலத்த எதிர்ப்பைக் கிளப்பியது. 

உலகக்கோப்பை போட்டிக்குப் பின் உருவான எல்லா கழிவுகளையும் அரசாங்கம் முறையாக அப்புறப்படுத்தாமல் நிலத்தில் அப்படியே கொட்டியது.

குளிர் காலத்தில் அங்கிருந்து ஹைட்ரோஜன் சல்பைட் மற்றும் மீத்தேன் வாயுக்கள் வெளியாகி அங்கு வாழும் மக்களுக்கு பல உடல் உபாதைகளைக் கொடுத்தது.

கடைசியில் குழந்தைகளுக்கு விஷ வாயு தாக்கி அந்தப் பகுதியைச் சுற்றி வாழும் குழந்தைகள் அடுத்தடுத்து உடல்நிலை சரியில்லாமல் தவித்த பிறகு தான், அரசாங்கம் அந்த குப்பைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்தது. 

இந்த சம்பவம் பலத்த பின்விளைவுகளை சந்தித்ததால் தான் கத்தார் இந்த Eco - Friendly ஸ்டேடியத்தை உருவாக்க முடிவு செய்தது.

இந்த ஸ்டேடியத்தின் 360 டிகிரி வீடியோவை பகிர்ந்துள்ளது ஃபிஃபா,

40,000 பேர் அமரும் அளவு திறன் கொண்ட இந்த ஸ்டேடியத்தில் ஆறு குரூப்-ஸ்டேஜ் போட்டிகளையும் ஒரு ரவுண்ட் ஆஃப் 16 என்கவுன்டர் போட்டியையும் நடத்துகிறது ஃபிஃபா.

சாதாரண ஸ்டேடியங்களைவிட இந்த ரிமூவபிள் ஸ்டேடியம் 40 சதவிகிதம் குறைந்த ஆற்றலைப் பயன்படுத்துவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

இப்போது மட்டுமல்லாமல் வருங்காலத்திலும் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க இந்த ஸ்டேடியம் உதவும்.

அடுத்ததாக உலகக் கோப்பையை நடத்தும் நாடுகள் அவசர அவசரமாக ஸ்டேடியம் கட்டுவதற்கு பதிலாக இந்த ஸ்டேடியத்தை பிரித்து மீண்டும் பொருத்திக்கொள்ள முடியும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?