அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான ரவீந்திர ஜடேஜா அணியை விட்டு விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், கடந்த ஆண்டு ஐபிஎல் சீசன் முடிவுற்ற சில தினங்களிலேயே, ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து சென்னை அணியை குறிப்பிடும் போஸ்ட்களை நீக்கியது, சிஎஸ்கே வின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்வதை நிறுத்தியதும் சர்ச்சைகளை கிளப்பியது.
ஐபிஎல் என்ற ஒரு தொடர் துவங்கியதிலிருந்து அனைவராலும் மிகவும் விரும்பப்படும் அணிகள் என்றால் அது சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் தான். இவ்விரண்டு அணிகளின் ரசிகர்கள், ஐபிஎல் போட்டிகளின் போது இந்தியா பாகிஸ்தான் ரசிகர்கள் போல அடித்துக்கொள்வார்கள்.
இந்த இரண்டு அணிகள் மீதும் அதீத காதல் கொண்டமைக்கு காரணம், முக்கியமாக இதனை வழிநடத்தும் கேப்டன்கள். சிஎஸ்கே துவக்கத்திலிருந்தே தல தோனியை அணியின் தலைவராக நியமித்திருந்தது. மும்பை இந்தியன்ஸ், சச்சினிடமிருந்து ரோஹித் சர்மாவிடம் வந்தது.
நான்கு முறை சென்னை அணி ஐபிஎல் கோப்பை வென்றுள்ளது, சாம்பியன்ஸ் லீக் நடந்த 15 சீசன்களில் மொத்தம் பதினோரு முறை பிளே ஆஃப் சென்ற ஒரே அணி, ஒன்பது முறை இறுதி சுற்றுக்கு தேர்வான அணி என சாதனைகள் ஏராளம்.
இவற்றைத் தாண்டி, இத்தனை வருடங்களில் மற்ற அணிகள் பின்பற்றாத மற்றொரு யுக்தியை சென்னை பின்பற்றி வந்தது. அது தான் பிளேயர் ரிடென்ஷன்.
அதாவது ஒரு தொடருக்காக தயாராகும் போது, சேரும் அணி அதிலுள்ள வீரர்களை பொருத்து அதன் வலிமை, அதன் வீக்னஸ், என்ன செய்தால் அணியை அந்த பருவத்தில் வெற்றிப்பாதையில் இட்டு செல்லலாம் போன்ற விஷயங்கள் நிர்ணயிக்கப் படும்.
ஆனால் சிஎஸ்கே விற்கு அது ஒரு பொருட்டாக இருந்ததே இல்லை. ஏலத்தின் போது அவர்கள் வாங்கும் வீரர்கள் யாராயினும், அவர்களை விளையாட்டின் ஏதாவது ஒரு கட்டத்தில் பயன்படுத்தியே தீருவார்கள்.
முக்கியமாக, ஒரு போட்டியில் களமிறங்கும் ஒரு வீரர், அந்த குறிப்பிட்ட மேட்சில் சரியாக விளையாடவில்லை என்றால், மற்ற அணிகளை போல உடனே அவரை வெளியேற்றாது. மூன்று அல்லது நான்கு போட்டிகளுக்கு தொடர்ந்து அவர்களை விளையாடவைத்து, பின்னாளில் அவர்களே அணியின் வெற்றிக்கு வித்திட்டவர்களாக மாறிய கதைகள் ஏராளம். மீண்டும் மீண்டும் வாய்ப்புகளை அளித்து, அவர்களை அணிக்கு வலுசேர்க்கவைக்கும் இந்த தக்கவைத்தல் யுக்தியை பிளேயர் ரிடென்ஷன் எனக் கூறலாம்.
ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், கேதார் ஜாதவ், மோயின் அலி, ராபின் உத்தப்பா என, இன்னும் நிறைய வீரர்கள் இந்த பட்டியலில் அடங்குவர். இதை இவர்கள் முன்வந்து ஒத்துக்கொண்டதும் உண்டு.
ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக அணி நிர்வாகத்திற்கும், அணியின் வீரர்களுக்கும் இடையிலான உறவில் விரிசல்கள் தோன்றியுள்ளது.
2020ல் பெருந்தொற்று காரணமாக போட்டிகள் துபாயில் நடைபெற்றது. அப்பொது அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா சில காரணங்களுக்காகத் தொடரில் பங்கேற்கவில்லை.
அடுத்த பருவத்தில் அவர் விளையாடினாலும், 2022ஆம் ஆண்டு நடந்த ஏலத்தில் அவர் விற்கப்படவில்லை. இத்தனை வருடங்களாக அவர் விளையாடிய சிஎஸ்கே அணியே அவரை ஏலத்தில் வாங்காமல் விட்டது, ரசிகர்கள் மத்தியில் சந்தேகங்களை எழுப்பியது.
2022ஆம் ஆண்டு நடந்த போட்டிகளில், சிஎஸ்கே அணியை இனி ஜடேஜா கேப்டனாக வழி நடத்துவார் என அறிவித்தது நிர்வாகம். துவக்கம் முதலே அணி சொதப்பிவந்த நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்குக் கூட தகுதி பெறாது என்ற நிலையில் மீண்டும் தோனியிடம் சென்றது கேப்டன்சி. இதற்கிடையில் காயம் காரணமாக ஜடேஜா தொடரின் நடுவில் விலகினார்.
ஆனால், அப்போது முதலே ஜடேஜாவிற்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையில் கருத்துவேறுபாடுகள் இருந்துவந்ததாக செய்திகள் தெரிவித்தன. ஜடேஜாவும் அதற்கேற்றாற்போல, தொடர் முடிவடைந்த ஒரு சில நாட்களிலேயே, அணி தொடர்பாக அவர் பதிவிட்டிருந்த புகைப்படங்கள தன் சமூக வலைத்தள பக்கங்களிலிருந்து நீக்கினார். மேலும் சிஎஸ்கேவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்டை பின்தொடர்வதை நிறுத்தினார்.
அணி நிர்வாகத்தினர், இது ஜடேஜாவின் தனிபட்ட முடிவு எனவும், எங்கள் தரப்பிலிருந்து எந்த பிரச்னையும் இல்லை எனவும் தெரிவித்தனர்.
சில நாட்களுக்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியை போற்றும் விதமான போஸ்ட் ஒன்றையும் தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார் ஜடேஜா. இது மீண்டும் சந்தேகங்கள எழுப்ப, தற்போது அணியிலிருந்து இவர் விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் நடைபெறவுள்ள அடுத்த பருவத்திர்கான ஏலத்தில் பங்கேற்கவுள்ளதாகவும் வட்டாரங்கள் கூறிவருகிறது.
இம்முறை அவர் தோனியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்காதது, தன் டிவிட்டர் பக்கத்தில் Blue Addiction என பதிவிட்டிருந்தது அனைத்தும் அவர் இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடலாம் எனவும் கூறப்படுகிறது.
15 ஆண்டுகளாக வலுவாக இருந்த அணி, தற்போது மெல்ல உடைந்துகொண்டிருப்பதால், ரசிகர்களை இது பாதித்துள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust