இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
பண்ட் டெல்லியிலிருந்து உத்தராகண்ட் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது ரூர்கீ அருகே சென்றுக்கொண்டிருக்கும்போது இவரது கார் கட்டுப்பாட்டை இழந்து டிவைடர் மீது மோதியதில், கார் தீப்பிடித்து எரிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காரில் ரிஷப் பண்ட் மட்டுமே பயணித்ததாக என்டிடிவி அறிக்கை கூறுகிறது. உத்தராகண்ட் போலீசார் கூறுகையில், பண்ட் காரின் விண்ட்ஷீல்டை உடைத்துக்கொண்டு தான் எரிந்துக்கொண்டிருந்த வாகனத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
விபத்தில் ரிஷப்பின் தலை, முழங்கால், தாடைப் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது மற்றும் முதுகு பகுதிகளில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரிஷப் பண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பண்ட் ஆபத்தான நிலையை கடந்து விட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் இவர் விரைவில் குணமடைய பிரார்த்தித்து வருவதாக தெரிவித்து வருகின்றனர்.
நேற்று தான், தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெகேஷனுக்கு சென்ற வீடியோவை பண்ட் பகிர்ந்திருந்தார்.
இந்திய அணி அடுத்ததாக இலங்கைக்கு எதிராக ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ள நிலையில் அந்த அணிகளில் இவர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust