Ind vs Aus: சதமடித்த ரோஹித் - புதிய சாதனை படைத்த இந்திய அணி கேப்டன் ட்விட்டர்
ஸ்போர்ட்ஸ்

Ind vs Aus: சதமடித்த ரோஹித் - புதிய சாதனை படைத்த இந்திய அணி கேப்டன்

Keerthanaa R

சர்வதேச கிரிக்கெட்டின் மூன்று ஃபார்மாட்களிலும் சதமடித்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்திருக்கிறார் ரோஹித் சர்மா

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது. முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஜடேஜா மற்றும் அஷ்வின் இணைந்து 8 விக்கெட்களை கைப்பற்றினர் ( ஜடேஜா 5, அஷ்வின் 3). இதன் பிறகு இந்திய அணி களமிறங்கி முதல் நாள் முடிவில், 77 - 1 என்ற நிலை இருந்தது.

இன்று தொடங்கிய ஆட்டதில் இந்தியா 2 விக்கெட்களை இழந்திருந்த நிலையில், பொறுமையாக விளையாடிய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, 171 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் விளாசி சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார் ரோஹித்.

கேப்டனாக கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் முதல் சதமடித்தார். அப்போது கேப்டனாக இருந்த கோலி அந்த போட்டியில் விளையாடாததால், ரோஹித் தலைமையேற்று அணியை வழிநடத்தினார். அதன் பிறகு அதே ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கைக்கு எதிராக நடந்த டி20 போட்டியில், சதமடித்தார் ரோஹித். இதுவே அவரது முதல் மற்றும் ஒரே சர்வதேச டி20 சதமாகும்.

தற்போது நடைப்பெற்று வரும் டெஸ்ட் போட்டியில் சதமடித்ததன் மூலம் மூன்று வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சதமடித்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்திருக்கிறார் ரோஹித் சர்மா.

தற்போதைய நிலவரம்:

120 ரன்களுக்கு ரோஹித் ஆட்டமிழந்துள்ல நிலையில், இந்திய அணி 249க்கு 7 விக்கெட்களை இழந்துள்ளது. ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் ஆட்டமிழக்காமல் உள்ளனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?