IPL 2023: முதல் வெற்றியை பதித்த ஹைதராபாத்; வீணாய் போன தவானின் 99 - காவ்யா மாறன் ஹேப்பி! Twitter
ஸ்போர்ட்ஸ்

IPL 2023: முதல் வெற்றியை பதித்த ஹைதராபாத்; வீணாய் போன தவானின் 99 - காவ்யா மாறன் ஹேப்பி!

Keerthanaa R

நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

கேப்டன் எய்டன் மார்க்ரமுடன் இணைந்த ராகுல் திரிபாதி, பொறுமையாக விளையாடியதில், 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வென்றது SRH அணி.

ஐபிஎல் 2023ன் நேற்றைய ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. கடந்த இரண்டு பருவங்களாகவே தொடர்ந்து சொதப்பலான ஃபார்மில் இருந்து வரும் அணிக்கு வெற்றி என்பது அத்திப்பூத்தாற்போல தான் இருந்தது.

கேப்டன்களை மாற்றி, புதிய பிளேயர்களை களமிறக்கியும், வெற்றி எட்டாக்கனியாகவே இருந்தது. இந்த ஆண்டும் புதிய கேப்டனுடன் களமிறங்கியுள்ளது சன் ரைசர்ஸ். எனினும், முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியையே தழுவியது.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் பவுலிங்கை தேர்வு செய்தது. இளம் வீரர் மயான்க் மார்கண்டே எடுத்த 4-15, பஞ்சாப் அணியை ஆட்டம் காண செய்தது.

ஒரு பக்கம் பஞ்சாப் பேட்டர்கள் சீட்டுக்கட்டு போல சரிய, பல்வால் தேவன் சிலையை பாகுபலி தூக்கி நிறுத்துவது போல அணியை தூக்கி நிறுத்தினார் கேப்டன் ஷிகர் தவான்.

கடைசி பந்து வரை ஆட்டமிழக்காமல் இருந்தவர், 99 ரன்கள் எடுத்து, இலக்கை 144 ஆக உயர்த்தினார்.

களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு தொடக்க வீரர்கள் பெரிதாக கைக்கொடுக்கவில்லை. பின்னர் சேர்ந்த கேப்டன் எய்டன் மார்க்ரம் - ராகுல் திரிபாதி இணை, பொறுமையாக விளையாடி அணியை வெற்றிப் பாதையில் ஈட்டுச் சென்றனர்.

வழக்கம்போல சாந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் திரிபாதி 48 பந்துகளில் 74 ரன்கள் அடித்திருந்தார். போட்டி முடிந்து பேசிய அணியின் கேப்டன் மார்க்ரம்,

“ராகுல் திரிபாதியின் திறனை நாங்கள் அறிவோம். அவரிடம் நாங்கள் திடர்ந்து சொன்னது ஒன்றைத்தான். உங்கள் திறனை வெளிப்படுத்துங்கள்.

களத்தில், மறுமுனையின் ராகுல் போன்றதொரு வீரர் இருந்தால், வெற்றி எளிதாகிறது.

இது அந்த அணிக்கு முதல் வெற்றி. இதனால் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனும் செம்ம ஹேப்பி அண்ணாச்சி.

நேற்றைய ஆட்டத்தில் ஷிகர் தவான் 99 ரன்கள் எடுத்ததால், தற்போது ஆரஞ்சு கேப் அவரிடம் உள்ளது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?