The 4 lesser-known football World Cup heroes  Messi, Ronaldo, Neymar
ஸ்போர்ட்ஸ்

Football World Cup: மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மரை தெரியும் - தெரிந்துகொள்ள தவறிய 4 நாயகர்கள்

உலகக் கோப்பை வரலாற்றில் தங்களது ஆதர்ச நாயகனின் பெயர் பொறிக்கப்பட வேண்டும் என்பது ரசிகர்களின் ஆவல். ஆனால் அப்படி தங்களது பெயர்களைப் பதிவு செய்த சில வீரர்கள் நாள் போக்கில் மறக்கப்பட்டும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஹீரோக்கள் தான் இவர்கள்.

Antony Ajay R

ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.

கால்பந்து உலகின் ஜாம்போவாங்களான ரொனால்டோ, மெஸ்ஸி மற்றும் நெய்மர் போன்றவர்களைப் பற்றியே நாம் அதிகமாக பேசிக்கொண்டிருக்கிறோம்.

குறிப்பாக ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி அடைந்த தோல்வி, அவர் அணிக்குள் விளையாட அனுமதிக்கப்படாதது என பல விஷயங்கள் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்காமல் இருந்தது.

இறுதிப்போட்டியில் விளையாடும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வெற்றி பெற வேண்டுமென்று உலகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்கள் பிரார்தித்து வருகின்றனர்.

'உலகக் கோப்பை வரலாற்றில்' தங்களது ஆதர்ச நாயகனின் பெயர் பொறிக்கப்பட வேண்டும் என்பது ரசிகர்களின் ஆவல்.

ஆனால் அப்படி தங்களது பெயர்களைப் பதிவு செய்த சில வீரர்கள் நாள் போக்கில் மறக்கப்பட்டும் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அப்படி இறுதிப்போட்டியில் தங்களது தீரத்தை நிரூபித்தும் பெரிய அளவில் கொண்டாடப்படாதவர்களைத் தான் இந்த கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

இவற்றையும் வாசித்துப்பாருங்கள்:

Football : மைதானத்துக்கு உள்ளேயே துப்பும் வீரர்கள் - அறிவியல் காரணம் தெரியுமா?

FIFA 2022: கத்தாரின் ஸ்டேடியம் 974 உலகக் கோப்பைக்கு பின் காணாமல் போகுமா?- விரிவான தகவல்கள்

Football World Cup 2022: மெஸ்ஸியின் ஜெர்ஸி நிறத்தில் டீ கடையை அலங்கரித்த நபர்!

ஃபேபியோ க்ரோசோ (Fabio Grosso) - இத்தாலி

ஃபேபியோ க்ரோசோ (Fabio Grosso) - இத்தாலி

2006-ம் ஆண்டு இத்தாலி உலகக் கோப்பை வெற்றி பெற்றதற்கு முதுகெலும்பாக இருந்தவர்.

அந்த தொடரில் 16 அணிகள் விளையாடும் சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசி நேரத்தில் பெனால்டி கோல் அடித்து காலிறுதிக்கு முன்னேற வழி செய்தார் க்ரோசோ.

அரையிறுதியில் கூடுதல் நேரம் வழங்கப்பட்ட போது கடைசி நேரத்தில் 119வது நிமிடத்தில் அவர் அடித்த கோலில் தான் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

இறுதிப்போட்டியில் அவர் அடித்த பெனால்டியில் தான் அந்த அணி 4வது முறையாக கால்பந்து உலகக் கோப்பையை கையில் ஏந்தியது.

2006ம் ஆண்டு இத்தாலி முழுவதும் கொண்டாடப்பட்ட அவருக்கு நாட்டின் உயரிய பாராட்டான ஆர்டர் ஆஃப் மெரிட் விருதை வழங்கியது அரசு.

அதன் பிறகு 6 ஆண்டுகள் விளையாடிய அவர் 2012ல் ஓய்வு பெற்றார்.

இப்போது Serie B side Frosinone க்ளப்பின் மேனேஜராக இருக்கிறார்.

டிம் க்ருல் (Tim Krul) - நெதர்லாந்து

டிம் க்ருல் (Tim Krul) - நெதர்லாந்து

கால்பந்து போட்டிகளில் கோல் கீப்பர்கள் கொண்டாப்படுவது மிகக் குறைவாகத்தான்.

அப்படியான ஒரு கோல் கீப்பர் தான் டிம் க்ருல்.

காலிறுதிக்கு தேர்வு பெறுவதற்கான முக்கியப் போட்டி 90 நிமிடத்தில் முடிவடையாததால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.

அந்த நேரத்ததில் பயிற்சியாளர், ஜாஸ்பர் சில்லெசனுக்கு பதிலாக க்ரூலை கோல் கீப்பராக மாற்றினார்.

அன்று பெனால்டியில் கோல் விடாமல் சிறப்பாக தடுத்த டிம் க்ருல் இன்றுவரை உலகக் கோப்பை போட்டிகளில் பெனால்டியில் கோல் அடிக்க விடாத ஒரே கீப்பராக திகழ்கிறார்.

இப்போதும் வெற்றிகரமான கோல் கீப்பராக திகழ்கிறார்.

பௌலோ ரோசி (Paolo Rossi) - இத்தாலி

பௌலோ ரோசி (Paolo Rossi) - இத்தாலி

1982ம் ஆண்டு இந்த வீரர் ஆடியது கால்பந்து வரலாற்றில் சிறந்த ஸ்ட்ரைக்களில் ஒன்று.

ஆனால் அவர் உலகக் கோப்பையில் விளையாடத் தொடங்கியபோது அவரது சிறிய உருவமைப்பு, மேட்ச் ஃபிக்சிங் குற்றச்சாட்டுகள் மற்றும் செல்வாக்கு இல்லாமை என சர்ச்சைகளால் சூழப்பட்டார்.

அரையிறுதிக்கு தேர்வாகும் சுற்றில் பிரேசிலுக்கு எதிராக இவர் ஹாட்ரிக் கோல் அடித்த போது ரசிகர்கள் மீண்டும் இவரை ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து அரையிறுதியில் போலந்து அணிக்கு எதிராக இத்தாலியின் இரண்டு கோல்களையும் அடித்து சாதனைப் படைத்தார்.

இறுதிப்போட்டியில் ஓபனிங் கோல் அடித்து வெற்றிக்கு வழிவகை செய்த போது ரசிகர்கள் மனதில் ஜீரோ டு ஹீரோவாக உயர்ந்திருந்தார்.

இவர் மீதிருந்த குற்றச்சாட்டுகளைச் சுட்டிக்காட்டி இவர் விளையாடவே கூடாது எனக் கூறியவர்களையும் மூக்குமேல் விரல் வைக்கச் செய்தார்.

1987 வரை கால்பந்து விளையாடிய இவர் கடந்த 2020ல் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மறைந்தார்.

ஒலெக் சலென்கோ (Oleg Salenko) - ரஷ்யா

ஒலெக் சலென்கோ (Oleg Salenko) - ரஷ்யா

1994 உலகக் கோப்பையின் பாடப்படாத ஹீரோ ஒலெக் சலென்கோ.

அந்த தொடரில் ரஷ்யாவுக்காக 8 போட்டிகளில் மட்டுமே விளையாடிய இவர் 6 கோல்களை அடித்திருக்கிறார்.

அவற்றில் 5 கோல்காள் ஒரே போட்டியில் கேமரூன் அணிக்கு எதிராக அடித்தார். அந்த போட்டியில் ரஷ்யா 6 - 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர்.

ஒரே போட்டியில் அதிக கோல்களை அடித்ததற்கான சாதனையை அந்த ஆண்டு படைத்தார்.

க்ரூப் சுற்றிலேயே அவர்கள் அணி வெளியேறினாலும், ஒரே ஒரு வீரராக ஒலெக் சலென்கோ கோல்டன் ஷூ வென்றிருந்தார்.

இப்போது 53 வயதாகும் இவர், கால்பந்து ஆடுவதை நிறுத்திவிட்டு தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?