Delhi Capitals அணி வீரர்கள் பேட், ஷூ திருட்டு - மதிப்பு என்ன? என்ன நடந்தது? twitter
ஸ்போர்ட்ஸ்

Delhi Capitals அணி வீரர்கள் பேட், ஷூ திருட்டு - என்ன நடந்தது? பொருட்களின் மதிப்பு என்ன?

Keerthanaa R

டேவிட் வார்னர் உட்பட, டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர்கள் சிலரின் கிரிக்கெட் சாதனங்கள் திருடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2023 டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஒரு கெட்ட கனவாக மாறிக்கொண்டிருக்கிறது. இதுவரை இந்த சீசனில் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது டேவிட் வார்னர் தலைமையிலான அணி.

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் கணக்காக, தற்போது நடந்திருக்கிறது ஒரு சம்பவம்!

டெல்லி அணி வீரர்கள் சிலரின் கிரிக்கெட் சாதனங்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஐபிஎல் மற்றும் கிரிக்கெட் வட்டாரங்களுக்கு மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15ஆம் தேதி பெங்களூருவில் ஆர் சி பி அணியை எதிர்கொண்டது டெல்லி. அதுவே அவர்கள் விளையாடிய கடைசி போட்டி. அதன் பிறகு நாளை கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது டிசி.

இதற்காக அணி பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் பயணித்தது. டெல்லி சென்றடைந்த அணி வீரர்களிடம் அவரவர் பொருட்களை ஒப்படைத்தபோது தான், தங்களது உடைமைகள் சில காணாமல் போனது தெரியவந்துள்ளது.

டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், யஷ் துல் உள்ளிட்டொரின் பேட், ஷூ, கையுறை போன்ற உபகரணங்கள் காணாமல் போயுள்ளது. இவை அனைத்தின் மதிப்பும் கிட்ட தட்ட 16 லட்சம் ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டேவிட் வார்னர் மற்றும் ஃபில் சால்ட் ஆகியோரின் தலா மூன்று பேட்கள், மிட்செல் மார்ஷின் இரண்டு பேட்கள், யஷ் துல்லின் ஒரு பேட் பறிபோயிருக்கிறது.

இது போன்ற சம்பவம் நடைபெறுவது இதுவே முதன்முறை. லாஜிஸ்டிக்ஸ் நிர்வாகத்திடம் தகவலளிக்கப்பட்டுள்ளது, மேலும் காவல் துறையினரிடமும் புகார் அளிக்கப்பட்டு, விசாரணைகள் தொடங்கியுள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?