WTC: மோசமான தோல்வியை சந்தித்த இந்தியா; அணி தேர்வு தான் காரணமா? மூத்த வீரர்கள் சாடல்! Twitter
ஸ்போர்ட்ஸ்

WTC: மோசமான தோல்வியை சந்தித்த இந்தியா; அணி தேர்வு தான் காரணமா? மூத்த வீரர்கள் சாடல்!

“இந்திய அணிக்கு சில சிறப்பான தருணங்கள் இருந்தன. ஆனால், நம்பர் ஒன் டெஸ்ட் பௌலராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை அணியின் ஏன் சேர்க்கவில்லை என்பதை என்னால் இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை.”

Keerthanaa R

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மிக மோசமாக மண்ணை கவ்வியது இந்திய அணி. இதனையடுத்து பல மூத்த இந்திய அணி வீரர்களும் மற்ற அணி வீரர்களும், ரசிகர்களும் ரோஹித் சர்மாவையும், அவரது அணித் தேர்வையும் குறித்து சாடி வருகின்றனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள், கடந்த இரண்டு பருவங்களாக நடைப்பெற்று வருகிறது.

இரண்டு இறுதிப்போட்டிக்கும் தேர்வானது இந்திய அணி. இரண்டிலுமே தோல்வியையே சந்தித்தது.

இரண்டாம் பருவத்தில் இறுதிப்போட்டிக்கு தேர்வான இந்திய அணியின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. காரணம், இந்திய அணி கடைசியாக ஒரு ஐசிசி கோப்பையை வென்று, 10 ஆண்டுகள் கடந்துவிட்டது தான்.

இறுதிப்போட்டிக்கான அணி அறிவிக்கப்பட்டதிலிருந்தே விமர்சனத்துக்குள்ளாகி வந்தது இந்திய அணி. டெஸ்ட் போட்டியின் நம்பர் ஒன் பௌலரான ரவிச்சந்திரன் அஸ்வின் பிளேயிங் 11ல் இடம்பெறவில்லை.

ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கிறது என்பதால் ஒரு சுழற்பந்து வீச்சாளரே அணியில் இடம்பெற்றார். அதுவும் ஜடேஜா தான்.

இதனால் மூத்த வீரர்களான சுனில் கவாஸ்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோர் இந்திய அணியின் தேர்வு அவர்களுக்கு தோல்வியை தேடி தரும் எனக் கூறியிருந்தனர்.

அவர்கள் சொன்னபடியே, இந்திய அணி நேற்று அவர்களுக்கு வழங்கப்பட்ட இலக்கை அடைய இயலாமல் அனைத்து விக்கெட்களும் இழந்து தோற்றது. அதிகபட்சமாக விராட் கோலி 49 ரன்களும், ரஹானே 46 ரன்களும் எடுத்திருந்தனர்.

இதனையடுத்து சுனில் கவாஸ்கர், ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் தங்களது கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர்

இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில், “கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், கடினமான முடிவுகளை எடுக்கவேண்டும்.

உங்களின் அணுமுறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை எதிர்கொள்ளும் விதத்தில் இருந்ததா? அணி தேர்வும், பேட்டிங் செய்யவேண்டுமா அல்லது பௌலிங்கா என்ற முடிவும் சற்றே அதிக பழமைவாதமாக போய்விட்டதா?” எனக் கேள்விக்கனைகளை தொடுத்திருந்தார்.

மேலும், நிர்வாகமும் அணுகுமுறையும் ஆசியக் கோப்பையை வென்று தரலாம், ஆனால் உலகக் கோப்பைகளை நம்மால் வெல்ல இயலாது என்றும் கூறியிருக்கிறார் கவாஸ்கர்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் இது குறித்து பதிவிட்டிருந்த ட்வீட்டில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் அணிக்கு சாதகமாக வலுவான அடிதளத்தை போட்டிருந்தனர் என்று பாராட்டியிருந்தார்.

மேலும், “இந்திய அணிக்கு சில சிறப்பான தருணங்கள் இருந்தன. ஆனால், நம்பர் ஒன் டெஸ்ட் பௌலராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை அணியின் ஏன் சேர்க்கவில்லை என்பதை என்னால் இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை.

போட்டிக்கு முன்பே நான் கூறியிருந்தது போல திறன்மிக்க ஸ்பின்னர்களுக்கு ஆடுகளம் ஒரு பொருட்டல்ல. ஆஸ்திரேலிய அணியின் 8 பேட்டர்களில் 5 பேர் இடது கை வீரர்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது” என்று பதிவிட்டிருந்தார் சச்சின்.

மேலும் கௌதம் கம்பீர் இது குறித்து கூறுகையில், “நம் நாடு அணி சார்ந்ததல்ல, தனி நபரை சார்ந்து இருக்கிறது. ஒரு தனிப்பட்ட வீரர் அணியை விட பெரியவராக இங்கு பார்க்கப்படுவது, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்றவை ஒரு ஒட்டுமொத்த அணியாக, குழுவாக பார்க்கப்படுவதே இந்த தோல்விக்கு காரணம்” என்று கூறியிருந்தார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இது குறித்து பேசுகையில், “தோனி விளையாடிய சமயத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைப்பெற்றிருந்தால், இந்திய அணிக்காக அந்த கோப்பையையும் அவர் வென்று தந்திருப்பார்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றதன் மூலம், அனைத்து ஐசிசி டிராபிக்களையும் வென்ற ஒரே அணி என்ற வரலாற்று சாதனையை ஆஸ்திரேலிய அணி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?