கோலி - தோனி  டிவிட்டர்
ஸ்போர்ட்ஸ்

விராட் கோலி : "எங்கள் பார்ட்னர்ஷிப் எப்போதும் ஸ்பெஷல்..." - 7+18 காம்போ குறித்து கோலி

Keerthanaa R

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் இந்திய அணியின் கேப்டனுமான விராட் கோலி நேற்று தனது சமூக வலைத்தளத்தில், தோனியுடன் விளையாடிய அனுபவங்கள் குறித்து ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். அது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

என்ன தான் தோனியும் கோலியும் நல்ல நண்பர்களாக இருந்தாலும், இருவரின் ரசிகர்கள் மத்தியில் இன்றும் ஃபேன் வார்கள் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. எது பெருசுன்னு அடிச்சுக் காட்டு என்பதுபோல சமூக வலைத்தளங்களில் அணல் பறக்கும் விவாதங்கள் போகும்.

ஆனால் அப்படி பகையோ, போட்டியோ இல்லை என்பது போல அவ்வப்போது இவர்கள் இருவரின் ஒற்றுமையை எடுத்துக்காட்டும் வகையில் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகும்.

அந்த வகையில், நேற்று விராட் கோலி தனது சமூக வலைத்தள பக்கங்களில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். அதில் அவர், தனக்கும், முன்னாள் இந்திய அணி கேப்டன் தல தோனிக்கும் இருந்த புரிதல், அவர்கள் பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சி தருணங்கள், மற்றும் தோனி தனது கரியரில் எவ்வளவு முக்கிய பங்காற்றினார் என்பதை கூறும் வகையில் எழுதியிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில், மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"இந்த மனிதரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த நேரங்கள் தான் என் கரியரில் மிகவும் சுவாரஸ்யமானா மற்றும் அற்புதமான தருணங்கள் ஆகும். எங்கள் பார்ட்னர்ஷிப் எனக்கு அப்போதும் ஸ்பெஷல்...7+18 " என நேற்று இரவு 11:43 மணிக்கு பதிவிட்டிருந்தார் கோலி.

கோலியின் வீழ்ச்சிக்கு தோனியும் ஒரு காரணம், கோலியும் தோனியும் எதிர் எதிரானவர்கள் போன்ற வதந்திகளுக்கு மத்தியில், இது இருவரின் ரசிகர்களையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ItalyCouple

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?