IPL 2023: விராட் கோலி டூ சஞ்சு சாம்சன் - ஐபிஎல்லில் இந்தியர்களின் அதிகபட்ச தனிபட்ட ஸ்கோர்! Twitter
ஸ்போர்ட்ஸ்

IPL 2023: விராட் கோலி டூ சஞ்சு சாம்சன் - ஐபிஎல்லில் இந்தியர்களின் அதிகபட்ச தனிபட்ட ஸ்கோர்!

ஐபிஎல்லில், பொதுவாகவே டி20 போட்டிகளில் சதமடிப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. இருக்கும் 20 ஓவர்களில், அதிரடியாக பவுண்டரிகள், சிக்சர்களாக பறக்கவிடவேண்டும்.

Keerthanaa R

நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில், 62 பந்துகளில் 124 ரன்கள் அடித்திருந்தார்.

ஐபிஎல்லில், பொதுவாகவே டி20 போட்டிகளில் சதமடிப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. இருக்கும் 20 ஓவர்களில், அதிரடியாக பவுண்டரிகள், சிக்சர்களாக பறக்கவிடவேண்டும்.

அப்படி ஐபிஎல்லில் சதமடித்து, அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் வைத்திருக்கும் இந்தியர்கள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்

கே எல் ராகுல் - 132

2020 ஆம் ஆண்டு கிங்ஸ் 11 பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தார் கே எல் ராகுல். அப்போது ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் சதமடித்தார்.

69 பந்துகளில் 132 ரன்கள் எடுத்திருந்தார் ராகுல். இதுவே ஐபிஎல் வரலாற்றில் ஒரு இந்தியரின் அதிகபட்ச ஸ்கோர். இந்த போட்டியில் அவர் ஆட்டமிழக்கவில்லை.

முரளி விஜய் -127

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர தொடக்க வீரராக இருந்தவர் முரளி விஜய். இவரும் மைக் ஹசியும், மேத்யூ ஹேடனும் சேர்ந்து அணிக்காக பல சாதனைகளை படைத்துள்ளனர்.

2010 ஆம் ஆண்டு ராஜஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியில் சதமடித்தார் முரளி விஜய். 8 ஃபோர், 11 சிக்சர்களுடன் 56 பந்துகளில் 127 ரன்கள் எடுத்தார் முரளி விஜய்

வீரேந்திர சேவாக் - 122

இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக். 2014 ஆம் ஆண்டு இவர் பஞ்சாப் அணிக்காக விளையாடியபோது, 58 பந்துகளில் 122 ரன்களை சேகரித்திருந்தார். இந்த போட்டியில் பஞ்சாப் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது

யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 124

2023 ஆம் ஐபிஎல்லில் நடந்த 1000வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஆர் ஆர் அணியின் தொடக்க வீரரான யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் இந்த போட்டியில் 62 பந்துகளில் 124 ரன்கள் எடுத்தார்.

ரிஷப் பண்ட் - 128

2018ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷ்ப் பண்ட்.

அப்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 63 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகள் உட்பட 128 ரன்கள் அடித்திருந்தார், ஆட்டமிழக்கவில்லை

பால் வால்தாட்டி - 120

கிங்ஸ் 11 பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர் பால் வல்தாட்டி. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 63 பந்துகளில் 120 ரன்கள் அடித்திருந்தார்

சாகா - 115

சாகா பஞ்சாப் அணிக்காக விளையாடிய போது கடந்த 2014 ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிராக நடந்த இறுதிப்போட்டியில் சதமடித்தார். 55 பந்துகளில் 115 ரன்களை சேகரித்தார் சாகா

மனிஷ் பாண்டே - 114

ஆர் சி பி அணிக்காக 2009 ஆம் ஆண்டு விளையாடிய மனிஷ் பாண்டே, டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக 73 பந்துகளில் 114 ரன்கள் எடுத்தார். அந்த சீசனில் சதமடித்த முதல் இந்திய வீரராகவும் திகழ்ந்தார் மனிஷ் பாண்டே

சஞ்சு சாம்சன் - 119

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன். இவர் 2011 ஆம் ஆண்டு ஐபிஎல் பருவத்தின் போது பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், 63 பந்துகளில் 119 ரன்கள் எடுத்திருந்தார். எனினும், ராஜஸ்தான் அணி அப்போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது

விராட் கோலி - 113

2016 ஆம் ஆண்டு கிங்ஸ் 11 பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 113 ரன்கள் சேகரித்தார் விராட் கோலி. இதுவே ஐபிஎல்லில் அவரது அதிகபட்ச ஸ்கோர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?