இந்தியா vs தென்னாப்ரிக்கா

 

Twitter

ஸ்போர்ட்ஸ்

வைட் வாஷ் இந்தியா, வீணாகப் போன போராட்டம் - கண்கலங்கிய தீபக் சாஹர்

தனது அபாரமான முயற்சி வீணாகப் போனதாலும் தொடர்ந்து இந்திய அணி தோல்வியைச் சந்தித்தாலும் சாஹர் ஆட்டமுடிவில் கண்கலங்கிக் காணப்பட்டார் அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

Antony Ajay R

நேற்று நடந்த மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. தென்னாப்ரிக்கா சுற்றுப் பயணத்தில் தொடர்ந்து 5 போட்டிகளை இந்திய அணி தோற்றுள்ளது.

டெஸ்ட் தொடர் தோல்வியைத் தொடர்ந்து முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் தோல்வியை சந்தித்ததின் மூலம் தொடரை இழந்தது இந்திய அணி. இருப்பினும் ஆறுதல் வெற்றியாவது பெரும் நோக்கில் களமிறங்கிய இந்தியா முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. 287 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்ளையும் இழந்தது தென்னாப்பிரிக்கா அணி. அதிகபட்சமா குயின்டன் டிகாக் 130 பந்துகளுக்கு 124 ரன்கள் அடித்திருந்தார்.

288 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. தொடக்கத்தில் ஆடிய விராட் கோலி மற்றும் சிக்கர் தவான் வலுவான துவக்கத்தை அளித்தனர். தவான் 61 ரன்களுக்கும் விராட் 65 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க. அதன் பின் இறங்கிய இளம் வீரர்கள் பந்தை எதிர்கொள்ளத் தடுமாறினர். அதுவரை இந்திய அணியின் கையிலிருந்த ஆட்டம் மெதுவாகத் திசை மாறியது.

தென்னாப்ரிக்க அணி

சூர்யகுமார் யாதவ் 32 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 34 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக இறங்கிய வீரர்கள் மீது அழுத்தம் அதிகமானது. ஆனால் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கிய தீபக் சாஹர் 34 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். இதில் 5 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடக்கம். ட்வைன் ப்ரெட்டோரியஸ் வீசிய 47வது ஓவரின் முதல் பந்தில் கேட்ச் அவுட் ஆனார். அப்போது 278 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது இந்திய அணி. ஆனால் சாஹர் விக்கெட்டுக்கு பிறகு பும்ரா மற்றும் சாஹல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 4 ரன்கள் வித்யாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.

தனது அபாரமான முயற்சி வீணாகப் போனதாலும் தொடர்ந்து இந்திய அணி தோல்வியைச் சந்தித்தாலும் சாஹர் ஆட்டமுடிவில் கண்கலங்கிக் காணப்பட்டார் அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

சாஹர் இந்த தொடரில் முதன் முறையாகக் களமிறங்கிய ஆட்டம் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?