Dhoni ஆல் TNPL தொடரில் விளையாட முடியுமா?  Twitter
ஸ்போர்ட்ஸ்

Dhoni ஆல் TNPL தொடரில் விளையாட முடியுமா?

Antony Ajay R

தமிழ்நாடு பிரிமியர் லீகின் 8வது சீசன் தொடங்க உள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் சென்னை அணி வெற்றி பெற்ற ‘வைப்’ அடங்காத தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு அடுத்த விருந்தும் தயாராகியுள்ளது.

தமிழ்நாடு பிரிமியர் லீகில் சர்வதேச போட்டியாளர்களும் பங்கேற்பார்கள் என்பது நாம் அறிந்தது தான். அனுபவமிக்க ஸ்பின்னரான ஆர் அஸ்வின் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக விளைடாடவுள்ளார்.

அஸ்வின் விளையாடும் தொடரில் தோனியால் விளையாட முடியும் தானே என ரசிகர்கள் நினைப்பதில் தவறில்லை. வேறெந்த போட்டியிலும் விளையாடாத நிலையில் தோனியால் டி.என்.பி.எல் விளையாட முடியுமா?

ஆனால் தோனிக்கு டின்.என்.பி.எல் போட்டியில் விளையாடும் தகுதி இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் தமிழ்நாடு ரசிகர்களுக்காக டி.என்.பி.எல் விளையாடுவதைத் தவிர தோனிக்கும் மகிழ்ச்சி தரக் கூடிய விஷயம் ஒன்றும் இருக்க  முடியாது. ஆனால் அவரே நினைத்தாலும் டி.என்.பி.எல்-ல் அவரால் விளையாட முடியாது. 

2018ம் ஆண்டு டின்.என்.பி.எல்லில் வெளி ஊர் வீரர்கள் விளையாட முடியாது என்ற விதி கொண்டுவரப்பட்டது. இதனால் 2018ம் ஆண்டு தொடரில் விளையாட பதிவு செய்திருந்த மற்ற ஊரின் 16 வீரர்களால் விளையாட முடியாமல் போனது.

தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷனில் பதிவு செய்யப்பட்ட வீரர்கள் மட்டுமே டி.என்.பி.எல்லில் விளையாட முடியும்.  ஆனால் தோனி ராஞ்சியில் வாழ்வதால் ஜார்கண்ட் கிரிக்கெட் அசோசியேஷனில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். 

இப்போது அவர் டி.என்.பி.எல் போன்ற எந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை என்பதனால் அவர் விளையாடுவதைப்பார்க்க நாம் அடுத்த ஐபிஎல் வரைக் காத்திருக்க வேண்டியது தான்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?