FIFA 2022 கத்தார் : கால்பந்து உலகக்கோப்பை தொடரில் அரங்கேறிய 5 மறக்க முடியாத தருணங்கள்!
FIFA 2022 கத்தார் : கால்பந்து உலகக்கோப்பை தொடரில் அரங்கேறிய 5 மறக்க முடியாத தருணங்கள்! messi and Mbappe
ஸ்போர்ட்ஸ்

FIFA 2022 கத்தார் : கால்பந்து உலகக்கோப்பை தொடரில் அரங்கேறிய 5 மறக்க முடியாத தருணங்கள்!

Antony Ajay R

கால்பந்து உலகக் கோப்பை 2022ன் இறுதிப்போட்டி இன்று நடைபெற இருக்கிறது.

கடந்த ஒரு மாதமாக நம்மை பிடித்திருந்த Football Fever விலகப் போவது வருத்தம் தான்.

கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் ஃபிஃபா 2022 தொடர் குறிப்பிடத்தக்க இடத்தை பிடிக்கும் எனக் கூறுமளவு பல சம்பவங்களை கடந்து வந்திருக்கிறோம்.

இந்த ஆண்டு கால்பந்து தொடரில் முக்கியமான நிகழ்வுகளாக பட்டியலிடப்பட்டுள்ள விஷயங்களைத் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

வரலாறு படைத்த மொராக்கோ

உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதிப் போட்டியில் நுழைந்த முதல் ஆப்ரிக்க நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது மொராக்கோ.

ஐரோப்பியாவின் தலை சிறந்த அணிகளான பெல்ஜியம், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் அணிகளை வீழ்த்தி இந்த இடத்தை மொராக்கோ அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மொரோக்கோவின் வெற்றி அந்த அணியினர், நாட்டினர் என்பதைக் கடந்து ஒட்டுமொத்த ஆப்ரிக்க கண்டத்தையும் மகிழ்ச்சயில் ஆழ்த்தியது.

அரையிறுதியில் ஆப்ரிக்காவிடமும் அடுத்த போட்டியில் குரோஷியாவிடமும் தோல்வியைத் தழுவியதால் மொரோக்கோ இந்த ஆண்டு நான்காவது இடத்தைப் பிடிக்கிறது.

நடுவராக பெண்கள்

கால்பந்து வரலாற்றில் முதன்முதலாக ஆண்கள் உலகக் கோப்பை தொடரில் பெண்கள் நடுவர்களாக பணியாற்றினர்.

Stéphanie Frappart  என்பவர் தான் முதல் பெண் நடுவராக திகழ்ந்தார்.

இவருக்கு உதவியாளர்களாக பிரேசிலைச் சேர்ந்த நியூசா பேக் மற்றும் மெக்சிகோவைச் சேர்ந்த கரன் டயஸ் இருந்தனர்.

மெஸ்ஸியின் கடைசி ஆட்டம்

இன்று அர்ஜெந்டீவும் பிரான்ஸ் அணியும் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளதால் நம் அனைவரின் கண்களும் மெஸ்ஸியை நோக்கியே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவர் ஏற்கெனவே இந்த தொடரில் வரலாறு படைத்துவிட்டார் எனலாம். அவரது 1000வது தொழில்முறைப் போட்டியானது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 4ம் தேதி நடைபெற்றது.

அதில் தனது 789வது கோலை நிறைவு செய்தார் மெஸ்ஸி. மேலும் இந்த உலகக் கோப்பைத் தொடரில் தனது தேசிய அணியை 100வது போட்டியில் கேப்டனாக வழிநடத்தியிருக்கிறார்.

இந்த தொடர் தான் அவருக்கு கடைசி உலகக் கோப்பைப் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரொனால்டோவின் சிதைந்த கனவுகள்

மெஸ்ஸியைப் போலவே ரொனால்டோவுக்கும் இந்த உலகக் கோப்பை போட்டி தான் இறுதிப்போட்டி. ஆனால் பிரம்மாண்டமான இறுதிப்போட்டிக்கு தகுதிபெறாமல் அவர் காலிறுதிலேயே வெளியேறினார்.

தோல்வியைத் தழுவிய உடனேயே அல் துமாமா மைதானத்திலிருந்து ரொனால்டோ கண்ணீருடன் வெளியேறிய காட்சிகளைப் பார்க்க முடிந்தது.

உருகுவே உடனான போட்டியின் போது அவர் அடித்ததாக கூறிய கோல் அவருக்கு வழங்கப்படாதது மற்றொரு ஏமாற்றத்தை வழங்கியது.

கால்பந்து வரலாற்றிலேயே 5 உலகக் கோப்பைகளில் கொல் அடித்த நபர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ரொனால்டோ.

இப்போது தனது க்ளபிலிருந்தும் விலகி புதிய க்ளபில் இணையும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இனி வரும் போட்டிகளில் தன்னை மீண்டும் நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரேசில்

இந்த ஆண்டு நிச்சயமாக உலகக் கோப்பையை வெல்லும் எனக் கூறப்பட்ட அணிகளில் ஒன்று பிரேசில்.

ஆனால் தொடக்கத்தில் மூன்று போட்டிகளும் பெரும் பின்னடைவாக இருந்தது.

ஆனால் தென் கொரியாவுடனான போட்டியை பிரேசில் கோல் அடித்து கொண்டாடினர்.

கோப்பையை வெல்ல முடியாது என்றாலும் தங்களை நிரூபித்த ஆனந்தத்தை நடனமாடி வெளிக்காட்டினர் பிரேசில் அணியினர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?