ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்ற பிறகு அந்த நாட்டின் பேட்டிங் ஆல்-ரவுண்டரான மிட்செல் மார்ஷ் கோப்பையை தனது காலுக்கு கீழ் வைத்து போஸ் கொடுத்தது சர்ச்சையை கிளப்பியது.
இதனையடுத்து பண்டிட் கேஷவ் என்பவர் டெல்லி கேட் காவல்நிலையத்தில் ஆஸ்திரேலிய வீரருக்கு எதிராக புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புகாரில் மிட்செல் மார்ஷ் மீது தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தியர்களால் விரும்பப்பட்ட கோப்பையை தனது காலுக்கு கீழே வைத்து 140 கோடி இந்தியர்களை அவர் அவமானப்படுத்தியதாக கேஷவ் தனது புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.
கேஷவின் புகாரை ஏற்றுக்கொண்ட காவலர்கள், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரை அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கும் அனுப்பியிருக்கிறார். இந்த புகாரின் அடிப்படையில் மிட்செல் மார்ஷுக்கு தடை விதிக்கப்படலாம்.
மிட்செல் மார்ஷின் நடவடிக்கை குறித்து கிரிக்கெட் வீரர் முகமது ஷமியும் தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தார். "நாங்கள் தலைக்குமேலே வைத்துக் கொண்டாட ஆசைப்பட்ட கோப்பையை காலில் வைத்தது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை" என அவர் பேசியிருந்தார்.
மிட்செல் மார்ஷ் இந்த தொடர் முழுவதும் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்திருக்கிறார். பாகிஸ்தான், பங்களாதேஷ் என இரண்டு அணிகளுக்கு எதிராக சதங்களை விளாசியிருக்கிறார்.
கிரிக்கெட் ரசிகர்களின் மனது இந்தியாவின் தோல்வியால் காயமடைந்திருந்தாலும் அவர்கள் வென்ற கோப்பையை என்ன செய்தால் என்ன? என்ற மனநிலையிலும் ட்வீட்களை போட்டுள்ளனர்.
கிரிக்கெட் உலகம் அடுத்ததாக இந்தியா - ஆஸ்திரேலியா டி20 போட்டி, அடுத்தடுத்த தொடர்கள் என நகரத் தொடங்கிவிட்டாலும் உலகக் கோப்பைத் தோல்வி இந்தியர்கள் மத்தியில் ஆறாத வடுவாக இன்னும் 4 ஆண்டுகளுக்கு நீளும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust