”வாடை காற்றுக்கு வயசாச்சு வாழும் பூமிக்கு வயசாச்சு, கோடி யுகம் போனால் என்ன காதலுக்கு எப்போதும் வயசாகது” என்ற பாடல் வரி பலரின் ஃபேவரட் லைனாக இருக்கும். ஒவ்வொரு பருவத்திலும் காதலின் அழகுக் கூடும்.
சிலர் ”ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும் அன்பே உன் பேரைச் சிந்தித்தால்...” என்று ஒரு தலையாக காதல் கீதம் பாடுவார்கள்.
சிலரோ ”நான் உன் அருகே நெசமாகுறேன் ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன்” என்று டுயட் பாடுவார்கள். ஒரு தலையோ, இருவரும் காதல் செய்பவர்களோ, காதல் காதல் தான்!
இன்றைய காலத்தில் ஆண் பெண் நண்பர்களாக பழகுவதில் சிக்கல் என்வென்றால், அது நட்பு ஜோனிலே இருக்கா இல்ல அதுக்கு மேலே சென்றுவிட்டதா? என்று பலருக்கு புரியாத புதிராகவே இருக்கும்.
லெட்டர், ஃபோன் கால், வாட்ஸ் அப் சாட் கடந்து தற்போது ஸ்டோரி, ஸ்டேட்டஸில் ப்ரொப்போசல் வருகிறது.
நண்பர்களாக பழகும் போது, அவர்களுக்குள்ளேயே ஒருவித வித்தியாசமான உணர்வுகள் வந்துவிடுகின்றன.
அவற்றை ஆண்கள் வெளிப்படையாக தெரிவித்துவிடுகின்றனர். ஆனால் பெண்கள் சொல்லமாட்டார்கள். அவர்களது மனதில் நீங்கள் இருக்கிறீர்களா என்பதை ஈஸியாக கண்டறிய 10 டிப்ஸ் இதோ!
அது நல்லதாக இருந்தாலும் சரி கெட்டதாக இருந்தாலும் சரி, தேவைப்படும் சமயங்களில் நான் உங்களுடன் உறுதுணையாக இருப்பேன் என்ற உணர்வை கொடுப்பார். உங்களை நம்பி எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வாள்.
ஒரு பெண் அவரின் அன்றாட வேலைகளுக்கு மத்தியிலும் முன்னுரிமை கொடுப்பது, அவளின் ஆழமான அன்பினை வெளிப்படுத்துகிறது. வாழ்க்கையில் முக்கியமான விஷயங்களைப் பற்றி உங்கள் கருத்தைக் கேட்பார்.
நீங்கள் சவுகரியமாக இருக்க வேண்டும் என்று அந்த பெண் கான்சியஸாக இருப்பார்.
அவள் உங்களிடம் Comfort ஆக இருக்கும் போது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துவாள். விளையாட்டாக உங்களை கிண்டல் செய்வாள். இன்னும் ஈஸியாக சொல்ல வேண்டும் என்றால் அவள் உங்கள் சிறந்த தோழியாக இருக்க முயற்சிப்பாள்.
ஒரு பெண் உங்களை உண்மையாக நேசிக்கிறாள் என்றால் உங்கள் கருத்துக்களையும் கண்ணோட்டத்தையும் அங்கீகரிப்பதன் மூலம் உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பாள்.
உங்கள் மீது அக்கறை காட்டுகிறாள் என்பதைக் காண்பிக்கும் வாய்ப்பை ஒருபோதும் விட்டு கொடுக்கமாட்டாள்
ஒரு பெண் உங்களிடம் ஆழமான அன்பை கொண்டிருக்கும்போது, குட் மார்னிங் மெசேஜ், ரீல்ஸ் என பல வழிகளில் அவர்களின் எண்ணங்களை வெளிப்படுத்துவார்
உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தீவிரமாக ஆர்வம் காட்டத் தொடங்கினால், அவள் உங்களை ரகசியமாக விரும்புகிறாள் என்று அர்த்தம். உங்கள் விருப்பு வெறுப்புகள், தேவைகள், ஆசைகள், லட்சியங்கள் போன்றவற்றை அவள் அன்புடன் கேட்பாள்.
உங்கள் தோற்றம், குறைபாடுகள், வித்தியாசமான பழக்கங்கள், சொதப்பல்கள் போன்றவை இருந்தபோதிலும், ஒரு நபராக நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே அவள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வாள். அவளுடைய உணர்வுகள் முற்றிலும் நிபந்தனையற்றதாக இருக்கும்.
உங்கள் கதைகளைக் கேட்பது மட்டுமல்லாமல், நீங்கள் பகிர்ந்து கொள்ளும் சிறிய விவரங்களை கூட நினைவில் வைத்திருப்பாள்.
அந்த விவரங்களைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் உங்களை ஆச்சரியமாக உணர வைக்க அவள் முயற்சி செய்வாள். உங்களுக்குப் பிடித்த பொருளை பரிசளிப்பாள்.
வேலை செய்யும் இடமாக இருந்தாலும் அல்லது பெற்றோருடன் சந்திப்பதாக இருந்தாலும் சரி, எதிர்காலத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புவதால் அவளுடைய உரையாடல்கள் எதிர்காலத்தைப் பற்றியதாகவே இருக்கும்.
அவள் உங்களை ஆழமாக நேசிக்கிறாள். உங்களுடன் நீண்டகால உறவைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறாள் என்பதற்கு இது மற்றொரு முக்கிய அறிகுறியாகும்.
சொல்லதான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் என முகம் முழுக்க சிவந்து எதோ சொல்ல முயற்சிப்பாள். வார்த்தைகளால் பேசுவதை விட கண்களில் அதிகம் பேசுவாள். அப்படியே பேசினால் மறைமுகமாக உங்களின் எதிர்காலம் அவள் தான் என்று சொல்லாமல் சொல்வாள்.
இதையெல்லாம் நீங்கள் ஒரு பெண்ணிடம் கவனித்தால், தயங்காம டக்குனு லவ் அ சொல்லிடுங்க! பின்விளைவுகள பின்னாடி பாத்துக்கலாம்...
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust