ஊட்டி மலை ரயில் சேவையின் 115 வது பிறந்தநாளை உள்ளூர் மக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடினர்.
இந்த கொண்டாட்டத்தை முன்னிட்டு ஊட்டி ரயில் நிலையத்தில் மலை ரயிலை இயக்கி வந்த ஓட்டுனர் மற்றும் ரயிலில் பயணித்த சுற்றுலா பயணிகளுக்கு மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கப்பட்டது.
தோடர் இன மக்கள் தங்கள் மொழியில் மலை ரயிலைப் பற்றி பாடி, பாரம்பரிய உடையில் நடனமாடியது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
ஆங்கிலேயர் ஆட்சியின் போது, மேட்டுப்பாளையம் மற்றும் குன்னூர் இடையே 1899 ஜூன் 15 முதல் மலை ரயில் இயக்கப்பட்டது. 1909 அக்டோபர் 15 முதல் இந்த ரயில் சேவை உதகை மலை நிலையம் வரை நீட்டிக்கப்பட்டது.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15-ம் தேதி நீலகிரி மலை ரயில் தினமாக கொண்டாடப்படுகிறது. நீலகிரி மலை ரயிலை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக 2005 ஜூலை 15ல் அறிவித்தது. இந்தியாவின் பழமையான ரயில்களில் ஒன்று இந்த ஊட்டி மலை ரயில்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி ரயில் நிலையம் வரையிலான ரயில் பாதையில் 16 குகைகள், 216 வளைவுகள் மற்றும் 250 பாலங்கள் உள்ளன. மேட்டுப்பாளையம் முதல் ஊட்டிக்கு வெறும் 46 கிலோமீட்டர் தான் என்றாலும், டாய் டிரெயினில் சுமார் 4 முதல் 5 மணி நேரம் ஆகிறது. மிகவும் ஆபத்தான, செங்குத்தான மலைப்பாதையில் ரயில் இயக்கப்படுவதால் இந்த நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
ஊட்டி மலை ரயில் தினமும் இரண்டு முறை இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை, மீண்டும் ஊட்டி முதல் மேட்டுப்பாளையம் வரை.
காலை 7 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் ரயில், நண்பகல் 12 மணிக்கு ஊட்டியை சென்று அடைகிறது. மீண்டும் மதியம் 2 மணிக்கு தொடங்கி, 5.30 மணியளவில் மேட்டுப்பாளையம் வந்து சேர்கிறது.
குன்னூர், வெலிங்டன், அரவங்காடு, கெட்டி மற்றும் லவ்டேல் ஆகியவை ரயில் செல்லும் முக்கிய நிலையங்கள். இதில் முதல் தர மற்றும் இரண்டாம் தர பயணச் சீட்டுகள் கிடைக்கும். இந்திய ரயில்வேவின் irctc.com மூலமாகவே இதில் பயணிக்க பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை செல்வதற்கு முதல் வகுப்பிற்கான கட்டணமாக 600 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust