400-year-old Tamil Nadu Fort, Once Home To Danish East India Company, To Get Facelift Twitter
தமிழ்நாடு

தரங்கம்பாடியில் இருக்கும் 400 ஆண்டு பழமையான டேனிஷ் கோட்டை - ஏன் நிச்சயம் பார்க்க வேண்டும்?

ஆட்சி மாற்றம் பெயர் மாற்றம் என பல விஷயங்களை எதிர்கொண்டாலும் கோட்டையின் வசீகரம் அப்படியே இருந்தது. கோட்டை அதன் வளமான கலாச்சார பாரம்பரியத்தை அனுபவிக்க பார்வையாளர்களை ஈர்க்கிறது.

Priyadharshini R

டேனிஷ் கோட்டை என்றும் அழைக்கப்படும் 400 ஆண்டுகள் பழமையான வரலாற்று நினைவுச்சின்னமான டான்ஸ்போர்க் கோட்டை இந்திய மற்றும் ஐரோப்பிய கட்டிடக்கலை பாணிகளின் வசீகரிக்கும் கலவையாகும்.

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு அமைதியான மீனவ கிராமமான தரங்கம்பாடியில் அமைந்துள்ள இந்த கோட்டை, உள்ளூர் பாரம்பரியத்தின் சான்றாகவும், அப்பகுதியில் குறிப்பிடத்தக்க அடையாளமாகவும் உள்ளது.

17 ஆம் நூற்றாண்டில் டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் குடியேற்றங்களுக்கான தளமாக முதலில் நிறுவப்பட்டது.

காலப்போக்கில், கோட்டையும் தரங்கம்பாடியின் நிர்வாகமும் ஆங்கிலேயர்களின் கீழ் வந்தது. அந்த ஆட்சியில், நகரத்தின் பெயரை டிரான்குபார் என மாற்றுவது உட்பட குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.

ஆட்சி மாற்றம் பெயர் மாற்றம் என பல விஷயங்களை எதிர்கொண்டாலும் கோட்டையின் வசீகரம் அப்படியே இருந்தது. கோட்டை அதன் வளமான கலாச்சார பாரம்பரியத்தை அனுபவிக்க பார்வையாளர்களை ஈர்க்கிறது.

இந்தியா 1947 இல் சுதந்திரம் பெற்ற பிறகு தரங்கம்பாடி புதிதாக உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக மாறியது.

அறிக்கைகளின்படி, நகரத்தின் வரலாற்று அடையாளங்கள் மற்றும் கட்டிடங்கள் அடுத்த ஆண்டுகளில் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டன.

தமிழ்நாடு அரசு டேனிஷ் கோட்டையை 1978 ஆம் ஆண்டு வரை ஆராய்ச்சி மையமாகப் பயன்படுத்தியது. அதன்பிறகு தமிழக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

தற்போது அகழ் வைப்பகம் என்னும் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் இந்த டேனிஷ் கோட்டை சார்ந்த பொருட்களும், டேனிஷ் காசுகள், டேனிஷ் தமிழ் பத்திரங்கள் போன்றவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கோட்டை இருமுறை புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?