திருச்செந்தூர் கோவிலின் கடலில் நீராடும் போது ஒருவரின் 5 சவரன் தங்கக் காப்பு திடீரென மாயமான நிலையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு கிடைத்த சம்பவம் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.
புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
கோயிலுக்கு வருவோர் கடலில் புனித நீராடுவது வழக்கம், அப்படி பக்தர் நீராடியவரின் 5 பவுன் காப்பு காணாமல் போன நிலையில் இரண்டே நாளில் கிடைத்த சம்பவம் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கார்த்திக் டெக்ஸ்டைல்ஸ் நடத்தி வருகிறார்.
இவர் கடந்த 1ஆம் தேதி குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். கோவிலுக்குள் செல்லும் முன் கடலில் புனித நீராடிக் கொண்டிருந்தனராம். அப்போது கார்த்திக் மகன் ஸ்ரீராம், கையில் அணிந்திருந்த 5 பவுன் தங்கக்காப்பு திடீரென கடலில் தவறி விழுந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து உடனடியாக அங்கிருந்த கடல் பாதுகாப்பு குழுவினர் சுமார் ஒரு மணி நேரம் தேடியும் தங்கக்காப்பு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
தொழிலதிபர் கார்த்திக் தான் தொழில் தொடங்கிய ஆரம்பக்காலத்தில் முதன் முதலாக மகன் ஸ்ரீராமுக்கு வாங்கிக் கொடுத்த தங்கக்காப்பு என்பதால் கடவுள் மீது பாரத்தை போட்டு முருகனிடம் வேண்டிச் சென்றுள்ளார்.
இந்தநிலையில் கடலில் தவறிய 5 சவரன் தங்க காப்பினை தீவிர தேடுதலில் ஈடுபட்டு வந்த கடல் பாதுகாப்பு குழுவினர் மீட்டு கார்த்திக்கிற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பேரில் திருச்செந்தூர் சென்ற கார்த்திக்கிடம் தங்க காப்பினை அவர்கள் கொடுத்தனர். முதல் முறையாக மகனுக்கு ஆசையுடன் வாங்கி கொடுத்த பொருள் கிடைத்த ஆனந்தத்தில் கார்த்திக் கடல் பாதுகாப்பு குழுவினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் முருகப்பெருமானிடம் மனம் உருகி வேண்டியதால் தவறிய பொருள் மீண்டும் கிடைத்ததாக கார்த்திக் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust