10 Places to Visit in Chennai  Twitter
தமிழ்நாடு

சென்னையில் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள் இவைதான்! சூப்பர் பட்ஜெட் ஸ்பாட்ஸ்

Priyadharshini R

சென்னையில் பார்க்க பல இடங்கள் உள்ளன. தினமும் நாம் கடந்து வரும் இடங்களாக இருக்கலாம் அல்லது கேள்விப்பட்ட இடங்களாக இருக்கலாம், மர்மமான இடங்களாக இருக்கலாம். அப்படி சென்னையில் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம்.

மெரினா கடற்கரை

மெரினா கடற்கரை சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு இடமாகும். செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து ஃபோர்ஷோர் எஸ்டேட் வரை நீண்ட கடற்கரையோரம் பூங்காக்கள் மற்றும் கடைகளால் நிரம்பியுள்ளது. கடற்கரையில் பல்வேறு வகையான சவாரிகளையும் குழந்தைகள் அனுபவிக்க முடியும்.

சென்னை கலங்கரை விளக்கம்

மெரினா கடற்கரையில் ஒரு முக்கிய அடையாளமாக இருப்பது சென்னை கலங்கரை விளக்கம் எனலாம். சென்னையின் வியூவை பார்வையிட இதைவிட சிறந்த இடம் வேறு எதுவும் இல்லை.

சென்னை அருங்காட்சியகம்

இந்த அருங்காட்சியகத்தில் சுவர்களை அலங்கரிக்கும் கலைப்பொருட்கள், ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் பழங்காலப் பொருட்களை கண்டு ஆராயலாம்.

வளாகத்திற்குள் பரிசுப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களை விற்கும் கடையும் உள்ளது. வெள்ளிக்கிழமை தவிர, மற்ற அனைத்து நாட்களிலும் தினமும் காலை 9:30 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த அருங்காட்சியகம் திறந்திருக்கும்.

Vandalur zoo

வண்டலூர் உயிரியல் பூங்கா

இது சென்னை வண்டலூரில் அமைந்துள்ளது. 1855 இல் நிறுவப்பட்ட இந்த உயிரியல் பூங்கா இந்தியாவின் முதல் பொது உயிரியல் பூங்காவாகும். 1,490 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த உயிரியல் பூங்கா ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் வாழ்விடமாகும்.

சென்னையில் காண வேண்டிய ஒரு சிறந்த இடமாக இருக்கும் இது குழந்தைகளோடு வரும் குடும்பத்தினருக்கு சிறந்த இடம் என்றே சொல்லலாம்.

எலியட்ஸ் கடற்கரை

பெசன்ட் நகரில் உள்ள இந்த எலியட்ஸ் கடற்கரை, நகரத்தின் மையத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு விசித்திரமான கடற்கரையாகும். இந்த கடற்கரை மெரினா கடற்கரையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.

நீங்கள் இந்த கடற்கரையில் சூரிய அஸ்தமன நேரத்தை அமைதியாகவும் ஆனந்தமாகவும் செலவிடலாம்.

லிட்டில் மவுண்ட் சர்ச்

சென்னையில் அடையாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற தேவாலயம் தான் லிட்டில் மவுண்ட் சர்ச். 16 ஆம் நூற்றாண்டில் இந்த தேவாலயம் போர்த்துகீசியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று இருக்கும் தேவாலயம் 1970 இல் பழைய தேவாலயத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு கட்டப்பட்டது.

தேவாலயத்தில் ஒரு குகை ஒன்று உள்ளது. அந்த குகையே இறைத்தூதரின் பிரார்த்தனை மற்றும் தியானத்திற்கான உறைவிடமாக இருந்ததாக கூறப்படுகிறது. பசுமைக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள இந்த தேவாலயம் இயற்கை எழில் கொஞ்சும் இடமாகவும் உள்ளது.

மகாபலிபுரம்

சென்னையில் 53 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது மகாபலிபுரம் அல்லது மாமல்லபுரம். கடற்கரை நகரமான இங்கு பழமையான கற்கோயில்கள் இருக்கின்றன. கடற்கரை, கலங்கரை விளக்கம், சிற்பங்கள் நிறைந்த கோவிலை இங்கே பார்க்கலாம்.

கபாலீஸ்வரர் கோவில்

மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவில், சென்னையில் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான தலம். கபாலீஸ்வரர் கோயில் சிவன் மற்றும் பார்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் கடவுள்கள் மற்றும் அசுரர்களின் சிற்பங்களுடன் முழுமையான திராவிட கட்டிடக்கலைப் பாணியைக் கொண்டுள்ளது.

தியோசாபிகல் சொசைட்டி

நகரத்தின் போக்குவரத்து, சலசலப்பு மற்றும் பரபரப்பான தெருக்களில் இருந்து சற்று விலகி செல்ல விரும்பினால், தியோசோபிகல் சொசைட்டியின் அழகான 'ஹடில்ஸ்டன் தோட்டம்’ சிறந்த இடம். 250 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த தோட்டங்களில் தேவாலயம், மசூதி, புத்த கோவில், இந்து கோவில் ஆகியவை உள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?