Anguththi Sunai  Twitter
தமிழ்நாடு

Summer vacation : வெறும் 30 ரூபாய் போதுமா? கிருஷ்ணகிரியில் இருக்கும் சூப்பர் பட்ஜெட் Spot

தமிழக வனத் துறையும் இந்த இடத்திற்கு ரூ.300க்கு ஒரு நாள் பேக்கேஜ்களை அறிவித்துள்ளது. அதில் ட்ரெக்கிங், பறவைகளைப் பார்ப்பது, நீர்வீழ்ச்சியில் குளிப்பது ஆகியவை அடங்கும்.

Priyadharshini R

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்து கெடகானூர் கிராமம் உள்ளது.

அங்கு இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த வற்றாத அங்குத்தி அருவி பொங்கி வழிந்து கொண்டிருக்கும்.

வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் எல்லையில் பரவியுள்ள ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த அங்குத்தி சுனை.

பூமியில் இருந்து தண்ணீர் ஊற்றெடுத்து வரும் இடத்தை தான் சுனை என்று கூறுவோம். அப்படி தண்ணீர் ஊறும் 5 நீர் நிலைகள் இங்கு உள்ளது.

கிருஷ்ணகிரியில் இருந்து மதூர், சாமல்பட்டி, ஊத்தங்கரை வழியாக சுமார் 61 கிலோ மீட்டர் பயணித்தால் அங்குத்தி அருவியை அடையலாம்.

ஜவ்வாது மலையின் இடையே ஊடுருவி வரும் இந்த நீர் நோய்களை தீர்க்கும் வல்லமை கொண்டது.

அதோடு கோடையிலும் வற்றாமல் ஓடும் இந்த சுனைக்கும், அருவிக்கும் ஆண்டு முழுவதும் மக்கள் வந்து செல்கின்றனர்.

இங்கே வரும் பார்வையாளர்களிடம் ரூ.30 நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் தமிழக வனத் துறையும் இந்த இடத்திற்கு ரூ.300க்கு ஒரு நாள் பேக்கேஜ்களை அறிவித்துள்ளது.

அதில் ட்ரெக்கிங், பறவைகளைப் பார்ப்பது, நீர்வீழ்ச்சியில் குளிப்பது ஆகியவை அடங்கும். அந்த பேக்கேஜைப் பெற https://www.forests.tn.gov.in/pages/view/anguthai-jonal-fals இந்த இணையத்தளத்தை பார்வையிடவும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?