திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறார்.
சமீபத்தில் ஒரு கைக்கடிகாரத்தை வைத்துக் கொண்டு, திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையும் மோதிக் கொண்டதை செய்திகளில் பார்த்திருப்போம்.
இதையடுத்து ரஃபேல் கடிகாரத்தின் ரசீது எங்கே என்று திமுகவினர் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அண்ணாமலை, கடிகாரத்தின் பில் மற்றும் தனது சொத்து மதிப்போடு திமுக அமைச்சர்கள் செய்த ஊழல்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார்.
திமுக அமைச்சர்களின் சொத்துப் பட்டியல் விவரங்கள் வெளியிடப்படும். ஒரு பென்டிரைவில் அதன் நகல் ஊடக நிறுவனங்களுக்கும் வழங்கப்படும்.
துபாயில் வணிகம், வணிக வளாகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் அவர்களின் அனைத்து முதலீடுகளும் அதில் இடம்பெறும் எனவும் தெரிவித்திருந்தார். அனைத்தும் விரைவில் பொதுமக்களுக்காக வெளியிடப்படும் என்று அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை திமுகவினரின் சொத்து பட்டியல் குறித்த வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில் யாருக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்பது குறித்து வெளியிட்டார்.
வீடியோவில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, திமுக எம்பி கனிமொழி கருணாநிதி, கலாநிதி மாறன், டி ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, அமைச்சர் பொன்முடி, அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் சொத்து பட்டியல் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜெகத்ரட்சகன் - 50219.37 கோடி
எ.வ.வேலு - 5,442.39 கோடி
கே.என்.நேரு - 2,495.14 கோடி
கனிமொழி- 830.33 கோடி
கலாநிதிமாறன் - 12,450 கோடி
டி.ஆர்.பாலு - 10,841.10 கோடி
துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் - 579.58 கோடி
கலாநிதி வீராசாமி - 2,923.29 கோடி
பொன்முடி மற்றும் கவுதம சிகாமணி - 581.20 கோடி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி 1,023.22 கோடி
உதயநிதி - 2,039 கோடி
மொத்தம் 1,343,170,000,000 (1,34,317 கோடி) என்ற விவரங்கள் திமுகவினரின் சொத்து பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
DMK Files -ல் பாகம் 2 விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கவிட்டுள்ளது.
இதற்கிடையில் மு.க.ஸ்டாலின் கட்டியிருக்கும் வாட்ச் பற்றி பேசினார். அது ரிச்சர்ட் மில்லி (Richard Mille) நிறுவனத்தின் வாட்ச். இதன் ஆரம்ப விலை 1.3 கோடி ரூபாய். அதிகபட்சமாக 2.25 கோடி ரூபாய் வரை இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தும் கார் மற்றும் வாட்ச் ஆகியவற்றின் விவரங்கள் திரையிடப்பட்டன. அதில், 1.64 கோடி ரூபாய் முதல் 1.84 கோடி மதிப்பிலான Range Rover Sports கார், 2.26 கோடி ரூபாய் மதிப்பிலான Range Rover Vogue கார், 82.54 லட்ச ரூபாய் மதிப்பிலான Volvo XI.60 கார், 80 லட்ச ரூபாய் மதிப்பிலான Hummer H-3 கார், 8.78 லட்ச ரூபாய் மதிப்பிலான Panerai வாட்ச், இடம் பெற்றன.
பின்னர் தான் கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச் குறித்த விவரங்களை கூறினார் அண்ணாமலை. இந்த வாட்சின் விலை 3 லட்ச ரூபாய். டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் பெல் அண்ட் ரோஸ் உடன் இணைந்து வாட்ச்சை தயாரித்துள்ளது.
உலகில் மொத்தமாக 500 வாட்ச்கள் தான் இருக்கின்றன. 147வது வாட்சை நான் வாங்கியுள்ளேன் என்றார்.
இந்தியாவில் இரண்டு வாட்ச்கள் மட்டும் தான் விற்கப்பட்டுள்ளன. ஒரு வாட்ச் மும்பையில் உள்ள எம்.என்.சி நிறுவனத்தில் வேலை பார்க்கும் சீனியர் அதிகாரி ஒருவர் கட்டியுள்ளார். மற்றொரு வாட்சை கோவையை சேர்ந்த சேரலாதன் என்ற நண்பர் வாங்கினார். அவரிடமிருந்த அந்த வாட்சை வாங்கியதாக அண்ணாமலை தெரிவித்தார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust