அண்ணாமலை: திமுக ரூ.5600 கோடி ஊழல் செய்ததா? DMK Files 2 சொல்லும் குற்றச்சாட்டுகள் என்னென்ன? Twitter
தமிழ்நாடு

அண்ணாமலை: திமுக ரூ.5600 கோடி ஊழல் செய்ததா? DMK Files 2 சொல்லும் குற்றச்சாட்டுகள் என்னென்ன?

Priyadharshini R

திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை மீண்டும் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கைக்கடிகாரத்தை வைத்துக் கொண்டு, திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையும் மோதிக் கொண்டதை செய்திகளில் பார்த்திருப்போம்.

இதையடுத்து ரஃபேல் கடிகாரத்தின் ரசீது எங்கே என்று திமுகவினர் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அண்ணாமலை, கடிகாரத்தின் பில் மற்றும் தனது சொத்து மதிப்போடு திமுக அமைச்சர்கள் செய்த ஊழல்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார்.

துபாயில் வணிகம், வணிக வளாகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் அவர்களின் அனைத்து முதலீடுகளும் அதில் இடம்பெறும் எனவும் தெரிவித்திருந்தார். அனைத்தும் பொதுமக்களுக்காக வெளியிடப்படும் என்று அண்ணாமலை கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை திமுகவினரின் சொத்து பட்டியல் குறித்த வீடியோவை வெளியிட்டார்.

திமுக அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, அன்பில் மகேஷ், உதயநிதி ஸ்டாலின், பொன்முடி மற்றும் மகன் கவுதம சிகாமணி, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, கலாநிதி வீராசாமி, ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த் மற்றும் முதல்வரின் மருமகன் சபரீசன், கலாநிதி மாறன் ஆகிய 12 பேரின் சொத்து பட்டியல் என்று சில விவரங்களை ‘டிஎம்கே ஃபைல்ஸ்’ என்ற பெயரில் வீடியோவாக வெளியிட்டார்.

மேலும் திமுகவினர் சொத்து மற்றும் ஊழல் பட்டியல் 2-ம் பாகத்தை தனது பாதயாத்திரைக்கு முன்பாக வெளியிடுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று சந்தித்துப் பேசினர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, மூத்த தலைவர்களுடன், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தாக குறிப்பிட்டுள்ளார்.

அப்போது, திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் தமிழக பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் கூறியபோது, ‘‘9 அமைச்சர்களின் பினாமி சொத்துகள், ஊழல் பட்டியலை பெரிய பெட்டியில் வைத்து ஆளுநரிடம் அண்ணாமலை வழங்கி உள்ளார்.

ரூ.5,600 கோடி அளவிலான ஊழல் பட்டியலை அண்ணாமலை தற்போது சுருக்கமாக வெளியிட்டுள்ளார். பாதயாத்திரையின்போது, இதுபற்றி செய்தியாளர்களிடம் விரிவாக கூறுவார்‘‘ என்றார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?