Apong: பீர் தயாரிக்கும் பெண்கள் - பழங்குடி மக்களின் வினோத மதுபானம் பற்றி தெரியுமா? Twitter
தமிழ்நாடு

Apong: பீர் தயாரிக்கும் பெண்கள் - பழங்குடி மக்களின் வினோத மதுபானம் பற்றி தெரியுமா?

மிசிங் பழங்குடியினர் தான் இதனை முதன்முதலாக உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த மதுவை கடைகளில் வாங்கவே முடியாது. பழங்குடி மக்கள் மட்டும் தலைமுறை தலைமுறையாக தயாரித்து பருகிவருகின்றனர்.

Antony Ajay R

அருணாச்சல பிரதேசம் அசாம் முதலிய வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பழங்குடி மக்களால் தயாரிக்கப்படும் அபாங் (Apong) எனும் மது வகை சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. 

இந்த பானம் அவர்களின் சமூக, கலாச்சார மற்றும் ஆன்மிக வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடிக்கிறது. அஹோம்ஸ் பழங்குடிகளால் ஹாஸ் என்றும் போடோ பழங்குடி மக்களால் சூ என்றும் அழைக்கப்படும் இதற்கு பல பழங்குடியினரிடம் பல பெயர்கள் இருக்கின்றன.

அடிப்படையில் இது அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை பியர்தான் என்கிறார்கள். மிசிங் பழங்குடியினர் தான் இதனை முதன்முதலாக உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.

அபாங்கை கடைகளில் வாங்கவே முடியாது. பழங்குடி மக்கள் மட்டும் தலைமுறை தலைமுறையாக தயாரித்து பருகிவருகின்றனர்.

எப்படி தயாரிக்கின்றனர்?

குளோபல் இன்ஸ்டிடியூட் ஃபார் ரிசர்ச் & எஜுகேஷன் அபாங் தயாரிப்பு குறித்து ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். 

சமைத்த அரிசியை மூலிகை அடிப்படையிலான இபாப் எனப்படும் ஸ்டார்டர் பயன்படுத்தி நொதிக்கச் செய்து இதனை உருவாக்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.

அரிசியை ஊறவைத்து அதனுடன் குறிப்பிட்ட இலைகளை 10-15 நாட்கள் காயவைத்து அரைத்த தூளையும் சேர்கின்றனர்.

இந்த கலவைடயில் தண்ணீர் சேர்த்து முட்டை வடிவத்தில் பிசைந்து வைத்துக்கொள்கின்றனர். இதுதான் அபாங் தயாரிப்பதில் மூலமான கலவை (இபாப்).

இரண்டுவகையான அபாங் தயாரிக்கப்படுகிறது. ஒன்று சமைத்த அரியை இபாப் பயன்படுத்தி நொதிக்கச் செய்து தயாரிக்கப்படுவது.

மற்றொன்று Po:ro Apong. இதில் அரிசி மட்டுமல்லாமல் எரிந்து சாம்பலாகிய நெல் உமி மற்றும் வைக்கோலையும் பயன்படுகின்றனர். இதனை தயாரிக்க அதிக நாட்கள் ஆகும். 

பொதுவாக அபாங் பண்டிகை தினங்களில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.

பெண்களின் வேலை

அபாங் தயாரிக்க பக்குவமும், பொறுமையும் கடின உழைப்பும் தேவை. இந்த செயலை வீட்டுப் பெண்களே பார்த்துக்கொள்கின்றனர்.

இந்த மதுவை உருவாக்குவதை வீட்டு வேலைகளின் ஒரு பகுதியாகவே பார்க்கின்றனர்.  தலைமுறை தலைமுறையாக பெண்களே அபாங் காய்ச்ச கற்றிக்கொண்டுள்ளனர். ஆண்களுக்கு தெரிந்தாலும் செய்வதில்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?