AR Rahman Street Twitter
தமிழ்நாடு

AR Rahman: கனடா நாட்டுத் தெருவுக்கு ரஹ்மானின் பெயர் - இணையத்தில் வைரலான புகைப்படம்

Keerthanaa R

கனடா நாட்டில் உள்ள ஒரு தெருவிற்கு ஏ ஆர் ரஹ்மானின் பெயரை வைத்து கௌரவித்துள்ளது அந்நாட்டு அரசு.

நமது ஊர்களில் பெருந்தலைவர்கள், பழம்பெரும் நடிகர்கள் போன்றவர்களில் பெயர்களை தெருக்களுக்கு வைப்பது வழக்கம். இது அவர்களை கௌரவிக்கும் விதமாகவும், அவர்களை நினைவு கூறும் விதமாகவும் செய்யப்படும். அந்த வகையில், கனடா நாட்டிலுள்ள ஒரு தெருவிற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் பெயரைச் சூட்டி கவுரவித்துள்ளனர்.

கனடா நாட்டிலுள்ள மார்க்கம் என்ற நகரத்தில் இருக்கும் தெருவிற்கு ஏ ஆர் ரஹ்மான் தெரு என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பெயரிடப்பட்ட பிறகு, அதனருகில் நின்று ரஹ்மான் அந்நகரத்தின் மேயர் மற்றும் அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த ரஹ்மான், மேயர் ஃபிராங் ஸ்கார்பிட்டிக்கு நன்றி தெரிவித்திருந்தார். மேலும், தன் பெயரின் உண்மையான அர்த்தம் இரக்கம் என தெரிவித்த ரஹ்மான், அது நம் எல்லோருக்கும் பொதுவாக இருக்கும் கடவுளின் குணம் என தெரிவித்தார். இந்த பெயர், கனடா நாட்டு மக்களுக்கு அமைதி, செழிப்பு, சந்தோஷம் மற்றும் நல்ல ஆரோக்கியம் ஆகியவற்றை வழங்கட்டும் எனவும் பகிர்ந்திருந்தார்.

மேலும், தனது இந்த வளர்ச்சிக்கும், புகழுக்கும் எப்போதும் உறுதுணையாக இருக்கும் இந்திய மக்கள் மற்றும் அவரது ரசிகர்கள், நண்பர்கள், உடன் வேலைபார்த்த கலைஞர்களுக்கும் ரஹ்மான் நன்றி தெரிவித்திருந்தார்.

இப்படியான கௌரவங்கள் தனக்குக் கிடைக்கும்போது, மேன்மேலும் உழைக்கவேண்டும் என்ற பொறுப்பையும், மக்களுக்கு ஊக்கமாக இருக்கவேண்டும் என்ற புத்துணர்வையும் தருகிறது எனக் கூறியுள்ளார்.

ஒரு வேளை நான் சோர்ந்துவிட்டால், எனக்கு செய்து முடிக்க காரியங்கள் இன்னும் நிறைய இருக்கிறது என்றும், சந்திக்க நிறைய மக்கள், கடக்க வேண்டிய பாதைகள் இருக்கிறது என்பதை நினைவில் வைத்திருப்பேன் எனவும் ரஹ்மான் கூறினார்

கனடா நாட்டில் உள்ள தெருவிற்கு ரஹ்மானின் பெயரை வைப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் 2013ல் இதே நகரத்தின் மற்றொரு தெருவிற்கு Allah-Rakha Rahman st எனப் பெயர் சூட்டப்பட்டது.

மேலும் கடந்த 2020ல் பிரபல இந்தி நடிகரான அமிதாப் பச்சனின் தந்தையின் பெயரை போலந்து நாட்டிலுள்ள வ்ரோக்லா என்ற நகரத்தின் ஒரு தெருவிற்கு சூட்டி அந்நாடு கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?