ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சிக்கு சென்ற ரசிகர்கள் அவதி - என்ன நடந்தது? Twitter
தமிழ்நாடு

ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சிக்கு சென்ற ரசிகர்கள் அவதி - என்ன நடந்தது?

அங்கு வந்திருந்தவர்கள், நிகழ்ச்சி ஏற்பாடு மோசம் எனவும் தெரிவித்தனர். கூட்ட நெரிசல், பார்க்கிங் குழப்பத்துக்கு மத்தியில் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி அரங்கேறியது.ரசிகர்கள் சிலரோ இந்த நிகழ்ச்சிக்காக தாங்கள் செலுத்திய கட்டணம் திரும்ப தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Priyadharshini R

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பணம் கொடுத்து டிட்கெட் வாங்கிய சிலர் தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாது என்று மன வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி பனையூரில் நடைபெற இருந்தது. ஆனால் மழை காரணமாக நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்நிகழ்ச்சி மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் நேற்று நடைபெற்றது. ஏ.ஆர்.ரஹ்மானின் 30 ஆண்டுகால இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை காண ஆர்வத்துடன் டிக்கெட் வாங்கிய ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது.

கடற்கரை சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு டிக்கெட் வாங்கியவர்கள் செல்ல காலதாமதம் ஏற்பட்டது. அங்கு வாகனத்தை பார்க்கிங் செய்ய கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் ரசிகர்கள் தங்களது சமூக வலைதள பதிவுகளில் தெரிவித்தனர்.

போக்குவரத்து நெரிசல் காரணமாக சிலர் நிகழ்ச்சிக்கு வராமல் அப்படியே வீட்டுக்கு திரும்பி சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக ரூ.1,000க்கு டிக்கெட் வாங்கியவர்கள் வேறொரு பிரிவுக்கான இருக்கையில் சென்றது, அதிகளவில் டிக்கெட் விற்பனை செய்தது போன்ற காரணத்தால் டிக்கெட் பெற்றவர்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை என்றும் ரசிகர்கள் தங்கள் பதிவுகளில் தெரிவித்துள்ளனர்.

அங்கு வந்திருந்தவர்கள், நிகழ்ச்சி ஏற்பாடு மோசம் எனவும் தெரிவித்தனர். கூட்ட நெரிசல், பார்க்கிங் குழப்பத்துக்கு மத்தியில் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி அரங்கேறியது.

ரசிகர்கள் சிலரோ இந்த நிகழ்ச்சிக்காக தாங்கள் செலுத்திய கட்டணம் திரும்ப தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?