தேனி : மலை வாசஸ்தலத்தில் மறைந்திருக்கும் சூப்பர் பட்ஜெட் Spot - போடிமெட்டு  செல்ல தயாரா?
தேனி : மலை வாசஸ்தலத்தில் மறைந்திருக்கும் சூப்பர் பட்ஜெட் Spot - போடிமெட்டு செல்ல தயாரா? Twitter
தமிழ்நாடு

தேனி: மலை வாசஸ்தலத்தில் மறைந்திருக்கும் சூப்பர் பட்ஜெட் Spot - போடிமெட்டு செல்ல தயாரா?

Priyadharshini R

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள போடிமெட்டு, ஏலக்காய் பயிரிடுவதற்கு முதன்மையான பகுதியாக அறியப்படுகிறது. பூப்பாறையிலிருந்து 10 கி.மீ தொலைவில், போடிநாயக்கனூர் செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலை 85 இல் அமைந்துள்ள போடிமெட்டு, 17 ஹேர்பின் வளைவுகளைக் கொண்டுள்ளது.

இது ஒரு சிறந்த பிக்னிக் ஸ்பாட் என்றே சொல்லலாம். பிரமிக்க வைக்கும் மலை காட்சிகளையும், இனிமையான காலநிலையையும் பார்வையாளர்களுக்கு போடிமெட்டு வழங்குகிறது.

சமீபத்திய ஆண்டுகளில், பார்வையாளர்கள் தங்குவதற்கு புதிய ஹோட்டல்கள் மற்றும் ஹோம்ஸ்டேகள் வந்துள்ளன.

அதனால், தங்குமிடம் குறித்து கவலைப்பட வேண்டாம். கார் அல்லது பைக்கில் பயணம் செய்தாலும், இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பாதையின் அனுபவத்தை பெற முடியும்.

போடிமெட்டில் மலை மட்டும் தான் இருக்கிறதா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இங்கு துடுப்பு படகுகள், மிதி படகுகள் மற்றும் விசைப் படகுகள் இருக்கின்றன.

ஒவ்வொன்றும் ஒரு மணி நேரத்திற்கு ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பார்வையாளர்கள் இந்த அனைத்து இடங்களையும் ஒரே நாளில் கண்டு ரசிக்கலாம். இது ஒரு தவிர்க்க முடியாத சுற்றுலாத் தலமாக உள்ளது.

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, போடிமெட்டு மலையின் மக்கள் தொகை 733 ஆகவும், இதில் 390 ஆண்களும் 343 பெண்களும் உள்ளனர். இந்த மலைப்பகுதியின் அமைதியை தேடி ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் வருகின்றனர். ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுடன், போடிமெட்டு வளமான இயற்கை சூழலை வழங்குகிறது.

போடிமெட்டுக்கு அருகில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்

  • டாப் ஸ்டேஷன் வியூ பாயிண்ட்

  • டாப் ஸ்டேஷன்

  • போடி மலை

  • போடிமெட்டு வியூ பாயின்ட்

  • கொழுக்குமலை புலி முகம் பாறை

  • கெல்ல சொக்கையா கோவில்

  • கொழுக்குமலை ஆஃப்-ரோட் டிரைவ் எண்ட் பாயிண்ட்

  • நீல குறிஞ்சி காட்சி புள்ளி

போடிநாயக்கனூருக்கு எப்படி பயணம் செய்வது?

மதுரை விமான நிலையத்தில் தினசரி சுமார் 24 விமானங்கள் உள்ளன.

அல்லிநகரம் (9.84 கிமீ), கம்பம் (20.06 கிமீ), மற்றும் இடுக்கி (23.57 கிமீ) ஆகியவற்றால் சூழப்பட்ட போடிநாயக்கனூருக்கு சாலை வழியாகச் செல்ல வசதியாக உள்ளது. இந்த இடங்கள் ஒரு குறுகிய வார விடுமுறையைத் திட்டமிடும் நபர்களுக்கு சிறந்த இடங்களை வழங்குகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?