ஊட்டியில் இப்படி ஒரு இடம் இருக்கா? இயற்கையின் செல்ல தொட்டி ‘கேர்ன்ஹில்’ செல்ல தயாரா? Twitter
தமிழ்நாடு

ஊட்டியில் இப்படி ஒரு இடம் இருக்கா? இயற்கையின் செல்ல தொட்டி ‘கேர்ன்ஹில்’ செல்ல தயாரா?

Priyadharshini R

ஊட்டியில் பார்க்க பல இடங்கள் உள்ளன. தாவரவியல் பூங்கா, அவலாஞ்சி ஏரி, மான் பூங்கா, கல்ஹட்டி நீர்வீழ்ச்சிகள், முதுமலை தேசிய பூங்கா என சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ பல இடங்கள் இருந்தாலும், அந்த வழக்கமான இடங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஓர் இடமாக உள்ளது கேர்ன்ஹில்.

இப்படி ஒரு இடம் இருப்பது குறித்து பலருக்கு தெரியவில்லை. எங்கு இருக்கிறது இந்த வனப்பகுதி என்று இந்த பதிவில் விரிவாக படிக்கலாம்.

ஊட்டி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து எமரால்டு செல்லும் சாலையில் 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது இந்த கேர்ன்ஹில். இதனை இயற்கையின் செல்ல தொட்டி என்று அழைக்கின்றனர். இருபுறங்களிலும் அடந்த மரங்களுடன் காட்சியளிக்கும், இந்த பகுதி வெகுவாக சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

அந்த பகுதிக்குள் சென்றதும் குறுகிய சாலை தென்படும், சிறிது தூரம் சென்று பார்த்தால் அங்கு ஒரு டிக்கெட் கவுண்டர் இருக்கும். அங்கு நீங்கள் டிட்கெட் எடுத்துக்கொண்டு வனப்பகுதிக்குள் செல்லலாம். பெரியவர்களுக்கு 20 ரூபாயும், சிறியவர்களுக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகம் இல்லாத இந்த வனப்பகுதி நீலகிரி கோட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தோடர் பழங்குடி மக்களின் பாரம்பரிய வளைவு குடிலை இங்கு நீங்கள் பார்க்கலாம்.

பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தோடர் பழங்குடியின மக்களின் 2 விற்பனை மையங்கள் உள்ளன. இவற்றில் தோடர் எம்ப்ராய்டரி சால்வை, தேன், சாக்லேட்கள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன.

அப்படி கொஞ்சம் தூரம் சென்றால் அங்கு இருக்கும் விளக்க மையத்தில் 300 ஆண்டுகளுக்கு முன் நீலகிரி எப்படி இருந்தது என காட்சியமைக்கப்பட்டிருக்கும்.

பல ஆண்டுகள் கழித்து உருவான சோலை மரக்காடுகள், புல்வெளிகள், மலைத்தொடர்கள் என தத்ரூபமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

மேலும் வனப்பகுதியின் மாதிரியில் பாறைச் சரிவில் வரையாடு, சிறுத்தை, கருமந்தி (ஒரு வகையான குரங்கு) போன்றவற்றின் உருவங்கள் அச்சுஅசலாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

இந்த வனத்திற்கு நடுவே சுற்றுலாப் பயணிகள் நடைப்பயணம் மேற்கொள்ளும் வசதியும் உள்ளது. நடைப்பயணமாகச் சென்று வனத்தின் நடுவே உள்ள காட்சிக் கோபுரத்திலிருந்து இயற்கை காட்சிகளைப் பார்வையிடலாம்.

கூடுதல் சிறப்பாக அந்த பெரிய பெரிய மரங்களுக்கு நடுவே தொங்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுற்றுலாப் பயணிகள் ஏறி நடந்துசென்று மறக்கமுடியாத அனுபவத்தை பெறலாம்.

கேர்ன்ஹில் வனத்தில் உள்ள தொங்கு பாலம் மற்றும் வன விலங்குகளின் மாதிரிகளைப் பார்வையிட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு குவிந்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?