அண்ணாதுரை Newssense
தமிழ்நாடு

”தமிழ்நாடு என்று என் மாநிலத்தை அழையுங்கள்” : அண்ணா ஆற்றிய உரையின் சுருக்கம்

நீங்கள் எதையாவது பெரிதாக இழப்பதாக இருந்தால் இந்தக் கோரிக்கையை நாங்கள் வலியுறுத்தவில்லை. அடிப்படையாக எதையும் நீங்கள் இழக்காதபோது இக்கோரிக்கையை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம். உங்களுக்கு என்ன லாபம் என கேள்வி எழுப்பப்பட்டது. உணர்வுபூர்வமாக நாங்கள் திருப்தி அடைவோம்.

NewsSense Editorial Team

தாய்த் தமிழ் நிலத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் கேட்டு வலியுறுத்தி, ‘தமிழ்நாடு என்று என் மாநிலத்தை அழையுங்கள்’ (Call my state Tamil Nadu) எனும் பொருளை மையப்படுத்தி மே 1963 - அண்ணா ஆற்றிய உரையின் சுருக்கம் இது.

“தமிழ்நாடு - என்ன இழப்பீர்கள்?”

தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்தின் வழி அடையப்போவது என்ன? என்ற கேள்விக்கு அண்ணா, “நான் எதை அடைவேன் ? பார்லிமெண்ட் என்ற பெயரை லோக் சபா என்று மாற்றியதன் மூலம் நீங்கள் எதை அடைந்தீர்கள்?  கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸ் என்பதை ராஜ்ய சபா என்று மாற்றியதன் மூலம் நீங்கள் எதை அடைந்தீர்கள்? பிரசிடெண்ட் என்பதை ராஷ்டிரபதி என்று மாற்றியதன் மூலம் நீங்கள் எதை அடைந்தீர்கள்?

நான் உங்களை திரும்ப கேட்கிறேன் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதால் நீங்கள் எதை இழக்கிறீர்கள்?

நீங்கள் எதையாவது பெரிதாக இழப்பதாக இருந்தால் இந்தக் கோரிக்கையை நாங்கள் வலியுறுத்தவில்லை. அடிப்படையாக எதையும் நீங்கள் இழக்காதபோது இக்கோரிக்கையை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம். உங்களுக்கு என்ன லாபம் என கேள்வி எழுப்பப்பட்டது. உணர்வுபூர்வமாக நாங்கள் திருப்தி அடைவோம். 

பழந்தமிழ்ச் சொல் கோடிக்கணக்கானவர்களின் நாவிலும் மனங்களிலும் இடம் பெறுகிறது என்று மகிழ்ச்சி அடைவோம்.”

“சங்க பாடல்களில் தமிழ்நாடு”

அந்த உரையில் அண்ணா, “சங்கத் தமிழ்ப் பாடல்களில் தமிழ்நாடு என்ற சொல் இடம் பெற்றிருக்கிறது. நான் குறிப்பிடும் நூல்கள் அனைத்தும் இன்றைக்கு 1800 அல்லது 2000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டவை. இந்த நூல்களின் பெயரை நான் தமிழில் குறிப்பிடுகிறேன். அந்த நூல்களின் பெயர்கள் பதிற்றுப்பத்து, பரிபாடல். அவற்றைவிட அதிகம் பிரபலமானவை சிலப்பதிகாரம், மணிமேகலை.

இவையெல்லாம் தமிழ்நாட்டின் தொன்மையான இலக்கியங்கள். இன்றைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டவை. பரிபாடல் நூலில், ’தண்டமிழ் வேலி தமிழ்நாட்டு அகமெல்லாம்’ என்ற வரி இடம்பெற்றுள்ளது. இதற்கு பொருள், “மூன்று பக்கங்களும் கடல் சூழ்ந்த இனிய தமிழ்நாடு!” 1800 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட ‘பதிற்றுப்பத்து பாடலில் ‘இமிழ் கடல் வேலி தமிழகம்’ என்றுள்ளது. இதன் பொருள், “கடலையே தன் எல்லையாக கொண்ட தமிழ்நாடு”.

தமிழ்நாட்டை ‘சிலப்பதிகாரத்தில்’ தென் தமிழ் தன்னாடு என்று வர்ணித்துள்ளனர். இதன் பொருள் நல்ல தமிழ்நாடு. 

மாண்புமிகு அவை உறுப்பினர்களுக்கு மேலும் சான்றுகள் வேண்டுமென்றால் கம்பன், சேக்கிழார் இயற்றிய நூல்களைப் படித்துப்பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவற்றில் பல இடங்களில் தமிழ்நாடு என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. அதற்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்ற மூன்று பெரும் அரசுகள் தோன்றி உள்ளன. இந்தப் பெயர்கள் தமிழ்நாட்டின் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன.

(தாய்த் தமிழ் நிலத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் கேட்டு வலியுறுத்தி, ‘தமிழ்நாடு என்று என் மாநிலத்தை அழையுங்கள்’ (Call my state Tamil Nadu) எனும் பொருளை மையப்படுத்தி மே 1963 - அண்ணா ஆற்றிய உரையின் சுருக்கம் மட்டுமே இது.)

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?