DD - Priya Bhavanishankar Twitter
தமிழ்நாடு

"அப்பாக்கள் பேரன்பின் அடையாளம்" - கோபிநாத்துக்கு குவிந்த பிரபலங்களின் பாராட்டு

சென்சிடிவ் ஆன ஒரு விஷயத்தை, மிக புத்திசாலித்தனமாகவும், முதிர்ச்சியாகவும் தொகுப்பாளர் கோபிநாத் கையாண்ட விதம் இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

Keerthanaa R

நேற்று ஒளிபரப்பான விஜய் தொலைகாட்சியின் நீயா? நானா? நிகழ்ச்சியில் கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் மனைவி என்ற தலைப்பில் விவாதங்கள் முன்வைக்கப்பட்டன.

நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில் மனைவி ஒருவர் தன் கணவனுக்கு படிக்க தெரியாது என்றும், அதனால் அவர் குழந்தையின் ரிப்போர்ட் கார்டை நீண்ட நேரமாக பார்ப்பார் சற்று கேலியாக கூறினார். இது தொகுப்பாளர், நிகழ்ச்சியிலிருந்த மற்ற பங்கேற்பாளர்கள் என அனைவரையும் சற்று அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தொகுப்பாளர் கோபிநாத் மனம் தளராமல் மீண்டும் அவருக்கு எடுத்துரைக்க முயன்றபோதும், அந்த பெண் தன் கருத்தை மாற்றாமல் முன்வைத்து வந்தார்.

இதனால், அந்த தந்தையின் குணத்தை பாராட்டி நிகழ்ச்சியின் முடிவில் கொடுக்கப்படும் பரிசை, அப்போதே கொடுத்தார் கோபிநாத். பரிசைக் கொடுக்கையில், அவரது மகள் "இல்ல அப்பா தோக்கல... எனக்காக தா எல்லாம் செய்யறாரு" என சொன்னது விவாதத்தின் போக்கை மாற்றியது.

சென்சிடிவ் ஆன ஒரு விஷயத்தை, மிக புத்திசாலித்தனமாகவும், முதிர்ச்சியாகவும் தொகுப்பாளர் கோபிநாத் கையாண்ட விதம் இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

நடிகை பிரியா பவானி சங்கர், விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளர் டிடி நீலகண்டன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், எழுத்தாளர் தாமரை என பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

"அப்பாக்கள் பேரன்பின் அடையாளம்! இந்தக் காணொளியில் காவியமாய் தெரியும் அப்பாவுக்கும், 'தன் அப்பா தோற்கவில்லை' என்ற அழகு மகளுக்கும் எனதன்பும், வாழ்த்தும்."
விஜயபாஸ்கர்
"ஒருத்தர இகழ்ந்து அதை நகைச்சுவைன்னு நினைச்சு சிரிக்கறது ஒரு விதமான மனநோய். உங்க பார்வையும் பேச்சும் திருப்தியா இருந்துச்சு கோபி அண்ணா"
பிரியா பவானி சங்கர்
"அந்த குழந்தையின் தைரியம் பெற்றோர்களின் வளர்ப்புக்கு சாட்சி. எந்த பட்டப்படிப்பும் அதை செல்லித்தராது, இப்படிப்பட்ட தந்தை கிடைக்க கொடுத்து வைக்க வேண்டும்"
டிடி நீலகண்டன்

மேலும் கவிஞர் தாமரை, முகநூல் பக்கத்தில் இந்த நிகழ்ச்சி குறித்த விவாதத்தின் ஒரு பதிவில் கமென்ட் செய்திருந்தார். அதில் "அம்மாக்கள் இல்லை என்றால் பிள்ளைகள் பள்ளிப் படிப்பைக் கூட தாண்டா" எனக் கூறியிருந்தார். மேலும் அதன் சாராம்சத்தில், படித்த பெண்கள் தான் குடும்ப முன்னேற்றத்திற்கு வழி வகுப்பார்கள் எனக் கூறியிருந்த தாமரை, நிகழ்ச்சியில் பேசிய அந்த பெண்ணை போல சிலர், "சொல்ல வருவதை சரியாக சொல்லத் தெரியாமல் தங்களுக்கு தாங்களே ஆப்பு வைத்துக் கொள்கிறார்கள்" எனவும் தெரிவித்திருந்தார்.

"பொதுவில் ஒரு கணத்தை பார்த்துவிட்டு பெண்களே இப்படித்தான் என எடை போடுவது தவறு" எனவும் கூறியிருந்தார் கவிஞர் தாமரை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?