சென்னை : ஓட்டுநரின் வங்கி கணக்கிற்கு திடீரென வந்த ரூ.9000 கோடி - ஓர் அடடே நிகழ்வு! (Rep image) Twitter
தமிழ்நாடு

சென்னை : ஓட்டுநரின் வங்கி கணக்கிற்கு திடீரென வந்த ரூ.9000 கோடி - ஓர் அடடே நிகழ்வு!

தனது வங்கிக் கணக்கில் இருந்து நண்பருக்கு 21,000 பணம் அனுப்பி 9 ஆயிரம் கோடி ரூபாய் பணம் தன் வங்கிக் கணக்கிற்கு வந்ததை உறுதிசெய்த ராஜ்குமார் அதிர்ந்துபோனார்.

Priyadharshini R

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த டிரைவர் ராஜ்குமார் என்பவரது வங்கிக் கணக்கிற்கு திடீரென 9000 கோடி ரூபாய் டெபாசிடிட் ஆகியிருக்கிறது.

பழனி நெய்க்காரப்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் கோடம்பாக்கத்தில் தங்கி வாடகை கார் ஓட்டி வருகிறார்.

கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி அன்று பணியின் போது அவரது செல்ஃபோனுக்கு மேசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் ராஜ்குமாரின் வங்கிக் கணக்கிற்கு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் இருந்து ரூ.9,000 கோடி டெபாசிட் ஆனதாக தகவல் வந்திருக்கிறது.

இதனை பார்த்த ராஜ்குமார், தனது வங்கிக் கணக்கில் வெறும் 15 ரூபாய் மட்டுமே இருந்தது, யாரோ தன்னை ஏமாற்ற முயல்கிறார்கள் என நினைத்திருக்கிறார்.

இதனையடுத்து தனது வங்கிக் கணக்கில் இருந்து நண்பருக்கு 21,000 பணம் அனுப்பி 9 ஆயிரம் கோடி ரூபாய் பணம் தன் வங்கிக் கணக்கிற்கு வந்ததை உறுதிசெய்த ராஜ்குமார் அதிர்ந்துபோனார்.

வேறு வங்கி கணக்கிற்கு 21 ஆயிரம் ரூபாய் பணம் பகிர்ந்த உடனேயே சம்பந்தப்பட்ட வங்கியிலிருந்து ராஜ்குமாருக்கு அழைப்பு வந்திருக்கிறது.

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகம் இருக்கும் தூத்துக்குடியில் இருந்து ராஜ்குமாருக்கு தொலைபேசி மூலம் அழைத்து ஒன்பதாயிரம் கோடி ரூபாய் பணம் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்

இதிலிருந்து பகிரப்பட்ட பணத்தை செலவு செய்ய வேண்டாம் என வங்கி நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் கிளைக்கு வங்கி தரப்பில் இருந்தும் டிரைவர் ராஜ்குமார் தரப்பில் இருந்தும் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து 9000 கோடி ரூபாய் பணத்தில் இருந்து பரிவர்த்தனை செய்யப்பட்ட 21,000 பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டாம் என தெரிவித்திருக்கின்றனர்.

வாடகை கார் ஓட்டுநருக்கு வங்கிக் கணக்கில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் திடீரென டெபாசிட் ஆன சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?