சென்னையில் கோயம்பேடு, சென்ட்ரல் பகுதிகளில் ஏற்கெனவே இரண்டு பேருந்து நிலையங்கள் இருக்கும் நிலையில் மூன்றாவதாக இன்று திறக்கப்பட்டது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.
கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயரிடப்பட்டுள்ளது. 393.74 கோடி ரூபாய் செலவில் 88.52 ஏக்கர் பரப்பில் உருவாகியுள்ள இந்த பேருந்து நிறுத்தத்தின் சிறப்புகள் என்ன?
130 அரசுப் பேருந்துகள், 85 ஆம்னி பேருந்துகளை நிறுத்தும் வசதி.
14 நடைமேடைகள், புற காவல்நிலையம், எஸ்கலேட்டர், லிப்ட் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
தினமும் 2,310 பேருந்துகளை இயக்கும் வகையில் பேருந்து நிலையம் அமைப்பு.
முதல் அடித்தளத்தில் 260 கார்கள், 568 இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும்.
2வது அடித்தளத்தில் 84 கார்கள், 2,230 இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும்.
மருத்துவமனை, 4 உணவகங்கள் உள்ளிட்ட 100 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
பயணச்சீட்டு வழங்கும் இடம், மருத்துவ மையம், தாய் பால் ஊட்டும் அறை, ATM அறைகள், 540 கழிப்பறைகள், ஓட்டுநர், நடத்துநர்கள் ஓய்வெடுக்கும் அறைகள் உள்ளன
4 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், 12 இடங்களில் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது
கோயம்பேடில் இருந்து 5 நிமிடத்துக்கு ஒரு பேருந்து கிளாம்பாக்கத்துக்கு விடப்படும் என போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust