Startups
Startups Twitter
தமிழ்நாடு

Swiggy, Rapido, Donzo; ஒரே நேரத்தில் மூன்று நிறுவனங்களில் வேலை ? - வியந்த நெட்டிசன்கள்

Antony Ajay R

ஒரே நேரத்தில் ஸ்விக்கி, ரேப்பிடோ மற்றும் டன்சோ நிறுவனங்களில் வேலை செய்யும் நபர் இணையத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ஓடி ஓடி உழைக்கணும் என்ற பாடலுக்கு ஏற்றவாரு பணியாற்றி வருவது இந்தக்காலத்தில் டெலிவரி ஊழியர்கள் மட்டும் தான். நிற்க நேரமில்லாத பெரிய நிறுவன ஊழியர்களுக்கு உட்கார்ந்த இடத்திலேயே உணவு மற்றும் பொருட்களை வழங்குவது இவர்களின் வேலை.

சமீப காலமாக இந்த தொழில்கள் மிகப் பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளன. இந்த டெலிவரி வேலையில் ஒரே நேரத்தில் மூன்று நிறுவனங்களில் பணியாற்றி கவனம் ஈர்த்திருக்கிறார் இந்த நபர்.

சென்னையைச் சேர்ந்த பெண் தனது லின்க்ட் இன் தளத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தான் அலுவலகம் செல்வதற்காக ரேப்பிடோ புக் செய்ததாகவும் அப்போது வந்த டிரைவர் அண்ணா ஸ்விகி டி-சர்ட் அணிந்து டன்சோ பை வைத்திருந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், அந்த நபர் ஒரெ நேரத்தில் மூன்று ஸ்டார்ட் அப்களிலும் வேலை செய்வதாக எண்ணுவதாகவும் அந்த பெண் கூறியுள்ளார். மக்கள் எவ்வளவு ஸ்மார்ட்டாக வேலை செய்கிறார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

அந்த போஸ்டில் ஹைலைட்டாக "அவர் என்னை அழைத்துச் செல்ல வந்திருந்தர் ( ஒரு சோமேட்டோ ஊழியர்) 😂" என்று அந்த பெண் எழுதியிருந்தார்.

அந்த டிரைவர் மிகவும் இன்ஸ்பைரிங்காக இருப்பதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.

மேலும் பலர் இந்த டிரைவர் குறித்து பலவிதமான கருத்துக்களைக் கூறியிருந்தனர்.

ஸ்விக்கி, ரேப்பிடோ மற்றும் டன்சோ நிறுவனங்கள் ஃப்ரீலான்சர்களையே அதிகமாக டெலிவிரி பணியில் அமர்த்தியிருக்கின்றனர். இந்த பணியாளர்கள் பணி உத்தரவாதம் மற்றும் நிலையான வருமானம் இல்லாமல் போராடி வருகின்றனர்.

மேலே காணப்பட்ட மூன்று நிறுவனங்களும் வெவ்வேறான டெலிவரி, பயண சேவைகளை வழங்குவதனால் அவர் உண்மையாகவே மூன்று நிறுவனத்திலும் வேலை செய்யக் கூடும் என்றும் நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?