சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கையை அதிகரித்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் மெட்ரோ நிறுவனம் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
வார இறுதி நாட்களில் குறைந்த கட்டணம், மெட்ரோ கார்ட் வைத்திருப்பவர்களுக்கு குறைந்த கட்டணம் என்று பல வசதிகளை கொண்டு வந்துள்ளது மெட்ரோ நிர்வாகம்.
மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மெட்ரோ ரயிலில் நாள் முழுவதும் ரூ. 100 எனும் கட்டணத்தில் பயணம் செய்வதற்கான சூப்பர் ஆஃபரை அறிவித்துள்ளது.
"ஒரு நாள் சுற்றுலா அட்டை" என பெயரிடப்பட்டும் சுற்றுலா அட்டையின் விலை ரூ. 150 ஆகும். இதில் ரூ. 50 பயண அட்டையில் வைப்பு தொகையாக வசூலிக்கப்படுகிறது.
ஒருநாள் சுற்றுலா அட்டையை பயன்படுத்தி மெட்ரோ வழித்தடங்களில் நாள் முழுக்க பயணித்துக் கொள்ளலாம். இந்த சுற்றுலா அட்டையின் கால அவகாசம் ஒருநாள் மட்டும்தான்.
அந்த வகையில் பயனர்கள் ஒருநாள் முடிவில் சுற்றுலா அட்டையை ஒப்படைக்கும் போது ரூ. 50 வைப்புத்தொகை திருப்பி தரப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.
இது வார இறுதியில் சென்னைக்குள் ஒரு நாள் சுற்றுலா, அல்லது குழந்தைகளோடு வெளியே செல்ல நினைக்கும் குடும்பங்களுக்கு சூப்பர் ஆஃபர் எனலாம்.
வாரத்தின் அனைத்து நாட்களிலும் இந்த அட்டை வழங்கப்படுகிறது. அனைத்து மெட்ரோ ஸ்டேஷன் கவுண்ட்டர்களிலும் இந்த அட்டை கிடைக்கும். இதனை பயன்படுத்தி சென்னையில் பல இடங்களை சுற்றி பார்க்கலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust