Modi NewsSense
தமிழ்நாடு

மோடி சென்னை வருகை : மக்களுக்கான மாற்று பாதையை அறிவுறுத்திய காவல்துறை - முழுமையான தகவல்

இன்று (26.05.2022) பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.

NewsSense Editorial Team

பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையை முன்னிட்டு, சென்னை மாநகரின் சில பகுதிகளில் இன்று (மே 26) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

இன்று (26.05.2022) பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.

சென்னையின் ஈவிஆர் சாலை, சென்னை மருத்துவக் கல்லூரி சந்திப்பு, அண்ணாசாலை, சர்தார் படேல் சாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. வாகன ஓட்டிகள் குறிப்பிடப்பட்ட இந்த சாலைகளில் செல்வதை தவிர்த்துவிட்டு மாற்று பாதைகளில் செல்லுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

PM modi

31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களுக்குச் சென்னை ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புறத்தின் கீழ் 116 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட ‘லைட் ஹவுஸ் திட்டம் - சென்னை’ திட்டத்தின் ஒரு பகுதியாகக் கட்டப்பட்ட 1,152 வீடுகளையும் பிரதமர் திறந்து வைக்கிறார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், குறைந்தபட்சம் 22,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் எனவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலின் கீழ், எட்டு இணை கமிஷனர்கள் (ஜேசிக்கள்), துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல்கள் (டிஐஜிக்கள்), 29 க்கும் மேற்பட்ட துணை கமிஷனர்கள் (டிசிக்கள்), கண்காணிப்பாளர்கள் (எஸ்பிஎஸ்) மற்றும் பல மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்விற்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?