Chennai : ஈவினிங் டைம்ல மகாபலிபுரம் போறீங்களா? இந்த இடத்தை மிஸ் பண்ணிடாதீங்க!
Chennai : ஈவினிங் டைம்ல மகாபலிபுரம் போறீங்களா? இந்த இடத்தை மிஸ் பண்ணிடாதீங்க!  Twitter
தமிழ்நாடு

Chennai : ஈவினிங் டைம்ல மகாபலிபுரம் போறீங்களா? இந்த இடத்தை மிஸ் பண்ணிடாதீங்க!

Priyadharshini R

சென்னையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மகாபலிபுரம் அதன் சிற்பங்களுக்கு பெயர்பெற்றது.

மகாபலிபுரம் முன்பு ஒரு காலத்தில் துறைமுக நகரமாக இருந்தது. 7வது மற்றும் 9ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இந்த கோவில் கட்டப்பட்டது. இதனை மூன்று தலைமுறை பல்லவமன்னர்கள் கட்டினர்.

பல்லவ மன்னர்களின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுத்தலம் நாம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று. கடந்த ஆண்டு தாஜ்மஹாலை விட அதிமாக சுற்றுலாப்பயணிகள் பார்வையிட்ட இடமாக திகழ்ந்தது.

மகாபலிபுரத்தில் பார்க்க கடற்கரை, சிற்பங்கள், கோவில்கள் இருக்கின்றன. ஆனால் இவை அனைத்தையும் பகலில் தான் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து வந்தனர்.

இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட சிற்பங்களை காண காலை 6:00 மணி மாலை 6:00 மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்

இரவு நேரங்களில் ஜொலிக்கும் சிற்பங்களை காண பார்வையாளர் நேரம் நீட்டிக்கப்பட வேண்டும் பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் முதல் முறையாக மாமல்லபுரம் கடற்கரை கோவிலை மட்டும் இரவு 9 மணி வரை கண்டுகளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இனி மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் இரவு நேரம் வரை காத்திருந்து மாமல்லபுரம் கடற்கரை கோவிலின் அழகினை மின் விளக்கு வெளிச்சத்தில் ரசித்து விட்டு செல்லலாம் என மாமல்லபுரம் தொல்லியல் துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முதல் கட்டமாக கடற்கரை கோவிலுக்கு மட்டும் இரவு நேர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மலைக்குன்றுடன் பரந்து விரிந்த வெண்ணை உருண்டை பாறை, ஐந்து ரதம் போன்ற புராதன சின்னங்களை பார்க்க இரவு நேர அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!

அமெரிக்காவில் இன்றும் கழுதைகள் மூலம் அஞ்சல் அனுப்பப்படுகிறதா! ஏன் இந்த நடைமுறை?

மெசேஜிங் செயலி விற்று கோடீஸ்வரரான இளைஞர் - எப்படி தெரியுமா?

”நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்” - கல்வி விருது விழாவில் விஜய் பேசியது என்ன?

அமெரிக்கா: வெப்பத்தால் உருகும் ஆபிரகாம் லிங்கன் மெழுகு சிலை!