செட்டிநாடு பலகாரங்கள் Twitter
தமிழ்நாடு

தீபாவளி ஸ்பெஷல் : பாரம்பரிய சுவையுடன் செட்டிநாடு பலகாரங்கள் - சிறப்பு என்ன?

வருடம் முழுவதும் தயாரிக்கப்படும் இவ்வகை செட்டிநாட்டு பலகாரங்கள் தீபாவளி பண்டிகை காலங்களிலும் அனைவராலும் விரும்பி சுவைக்கப்படுகிறது.

Priyadharshini R

சமையல் கலைக்கு புகழ் பெற்ற செட்டிநாட்டு பலகாரங்கள், உலக அளவில் புகழ்பெற்றவை.

வருடம் முழுவதும் தயாரிக்கப்படும் இவ்வகை செட்டிநாட்டு பல காரங்கள் தீபாவளி பண்டிகை காலங்களிலும் அனைவராலும் விரும்பி சுவைக்கப்படுகிறது.

இந்த செட்டிநாட்டு பலகாரங்கள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூர், பள்ளத்தூர், உள்ளிட்ட செட்டிநாட்டு பகுதிகளில் அதிக அளவில் செய்யப்படுகிறது. இவை சுத்தமான செக்கு எண்ணெய்யில் தயாரிக்கப்படுகிறது.

பாரம்பரிய செட்டிநாடு பலகாரங்கள்

முறுக்கு

அதிரசம்

சீடை

இனிப்பு சீடை

கை முறுக்கு

தேன் குழல்

மாவு உருண்டை என பல்வேறு பாரம்பரிய செட்டிநாட்டு பலகாரங்களுக்கு தனி இடம் உண்டு!

சிறப்பு:

லாபத்தை விட தரத்திற்கு அதிக முக்கியத்துவம்

அனைத்து செட்டிநாட்டு பலகாரங்களும் பாரம்பரிய முறைப்படி பக்குவத்துடன் தயாரிக்கப்படுகிறது.

செட்டிநாட்டு சுவைக்காக, விறகு அடுப்புகளில் பலகாரங்கள் தயாரிக்கப்படுகிறது.

சுத்தமான செக்கு எண்ணெய்யில் தயாரிக்கப்படுகிறது.

காரைக்குடியை சுற்றியுள்ள பெண்களுக்கு இது ஒரு நல்ல வேலை வாய்ப்பு

கல்யாண சீர் முதல் தீபாவளி சீர் வரை

கல்யாண சீர் முதல் தீபாவளி சீர் வரை செட்டிநாட்டு பலகாரங்கள் தனித்து நிற்கும்

வருடம் முழுவதும் அதிரசம், உருண்டை சீடை, மாவு உருண்டை தேன்குழல், மிக்சர் ஆகியவை செய்யப்படுகிறது.

தீபாவளி பண்டிகையின் போது கூடுதலாக லட்டு, ஜிலேபி, மைசூர் பா, பாதுஷா போன்றவை செய்யப்படுகிறது.

வெளிநாட்டிற்கு செல்லும் செட்டிநாடு பலகாரம்

தயாரிக்கப்படும் செட்டிநாடு பலகாரங்கள் சென்னை, மதுரை, திருச்சி போன்ற தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது. அதேபோல பெங்களூர், கேரளா போன்ற வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் சிங்கப்பூர், மலேசியா என தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் செட்டிநாட்டின் பலகாரங்கள் அனுப்படுகிறது.

5, 7 மற்றும் 9 வரிசை கொண்ட தேன் குழல் முறுக்கு வகைகள், அதிரசம், மண ஓலம் , மாவு உருண்டை, சீடை, சீப்பு சீடை, தட்டை, கை முறுக்கு, காரா பூந்தி, மிக்சர் உள்ளிட்டவை செட்டிநாடு பலகாரங்களில் பிரபலமானவை!

சீப்பு சீடை

அரிசி மாவு - 1 கப்

உளுத்தம் மாவு - 1/4 கப்

கடலை மாவு - 1/4 கப்

கெட்டியான தேங்காய் பால் - 1/4 கப்

வெண்ணெய் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

சுடுநீர் - தேவையான அளவு

செய்முறை

முதலில் அரிசி மாவு, உளுத்தம் மாவு மற்றும் கடலை மாவு சேர்த்து, அத்துடன் உப்பு, வெண்ணெய் சேர்த்து கையால் பிசைய வேண்டும்.

பின்னர் அதில் தேங்காய் பாலை வெதுவெதுப்பாக சூடேற்றி கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். தேங்காய் பால் போதாமல் இருந்தால், சுடுநீரை கொஞ்சம் ஊற்றி பிசைந்து கொள்ளலாம்.

பின்பு முறுக்கு உழக்கை எடுத்துக் கொண்டு, தட்டையாக சீப்பு போன்று இருக்கும் அச்சை எடுத்து பொருத்தி, பின் அதில் மாவை வைத்து, ஒரு தட்டில் நேராக ஒரு கோடு போன்று பிழிய வேண்டும்.

பின் கத்தியால் சிறு துண்டுகளாக வெட்டி, பின் அதனை உருட்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ளதைப் போட்டு பொரித்து எடுத்தால், சீப்பு சீடை ரெடி!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?