சிக்கன் பிரியாணி Twitter
தமிழ்நாடு

50 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி: கடை உரிமையாளரை எச்சரித்த காவல்துறை - எங்கே?

Priyadharshini R

'50 பைசா கொண்டு வருபவருக்கு சிக்கன் பிரியாணி' என்ற தனியார் பிரியாணி கடை அறிவிப்பு ஒன்றை கொடுத்திருந்தது. இதனால் வாடிக்கையாளர் கூட்டம் அலை மோதியதையடுத்து போலீசார் உணவக உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

உணவு பிரியர்களின் விருப்பமான உணவுகளின் ஒன்றாக பிரியாணி உள்ளது. அந்த பிரியாணி எங்கு நன்றாக இருக்கும் என மக்கள் தேடித் தேடி சென்று உண்பார்கள். அதுவும் குறைந்த விலை கிடைத்தால்!?

அப்படி தான் 50 பைசா கொண்டு வருபவர்களுக்கு ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்று உணவகம் ஒன்று அறிவிப்பு விடப்பட்டது.

biryani

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் பகுதியில் பிரியாணி உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம் தொடங்கி ஒரு ஆண்டு நிறைவானதை முன்னிட்டு கொண்டாடும் விதமாக வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான சலுகை அறிவிக்கப்பட்டது.

50 பைசா கொண்டு வருபவர்களுக்கு ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த பிரியாணியை வாங்க உணவகத்திற்கு வாடிக்கையாளர் கூட்டம் அலை மோதியது.

மக்கள் கூட்டம் அதிகமான காரணத்தால், தகவல் அறிந்த பசுபதி பாளையம் காவல் நிலைய போலீசார் அப்பகுதிக்கு வந்து உணவக உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும், அனுமதி பெறாமல் இதுபோன்று சலுகைகள் விடக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?