Child Line Twitter
தமிழ்நாடு

குழந்தைகளுக்கான ஹெல்ப் லைன் எண்: எதற்குப் பயன்படுத்தலாம்?

Antony Ajay R

குழந்தைகளுக்கான பிரச்சனைகள் இப்போதும் அதிக அளவில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளும் தொடர்ந்து நடக்கத்தான் செய்கின்றன. ஆனால், இது தொடர்பான விஷயங்களுக்குப் புகார் அளிக்கவோ, எதாவது ஆக்‌ஷன் எடுக்கவோ யாரைத் தொடர்புகொள்வது எனத் தெரியாமல் பலர் உள்ளனர்.

இந்திய அரசால் குழந்தைகளின் பாதுகாப்புக்காக இலவச தொலைப்பேசி அழைப்புத் திட்டம் 1098 ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதைப் பற்றிப் பலருக்கும் தெரியவில்லை. இந்த இலவச தொலைப்பேசி எண்ணான 1098 குழந்தைகளுக்கு உரிய எண். குழந்தைகளின் பாதுகாப்புக்காக, இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும் இருந்தும் இலவசமாக இந்த எண்ணை அழைக்கலாம். தொடர்பு கொண்டு பேசலாம்.

குழந்தை

இந்த எண் எல்லோரும் நினைவில் வைத்துக்கொள்ளும்படியாக 10, 9, 8 என்ற இறங்கு வரிசை கவுன்ட் நகரத்தில் அமைந்துள்ளது. இது குழந்தைகளின் பாதுகாப்பிற்காக இந்த மையம் செயல்படுகிறது. மும்பையில் 1996-ம் ஆண்டு, இலவச சைல்டு லைன் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த அழைப்புகளின் மேல் குழந்தை நல வாரியம், மருத்துவத்துறை, காவல்துறை, மாவட்ட வருவாய்த் துறை மற்றும் சமூகநலத்துறை ஆகியோர் தகுந்த நடவடிக்கை எடுக்கின்றனர். இந்தியா முழுவதும் 291 நகரங்களில் இந்தத் திட்டம் செயல்படுகிறது. கிட்டதட்ட 540 தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் இத்துடன் இணைந்து செயல்படுகின்றன.

குழந்தைகள்

எதற்குத் தொடர்பு கொள்ளலாம்?

குழந்தைகளின் நலனுக்குப் பாதிப்பு ஏற்படும் வண்ணம், எங்கு அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தாலும் இந்த எண்ணில் இலவசமாகத் தொடர்பு கொள்ளலாம்.

பாதுகாப்பின்றித் தெருவில் திரியும் அம்மா, அப்பா இல்லாத குழந்தைகள்

குழந்தை தொழிலாளர்கள் எவரேனும் கண்டால் தொடர்பு கொள்ளலாம்

வீட்டு வேலை செய்யத் துன்புறுத்தப்படும் பெண் குழந்தைகள்

வீடு, பள்ளி மற்றும் தொழிற்சாலையில் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் குழந்தைகள்

பெற்றோர் இல்லாமல், வழிகாட்டி இல்லாமல் திரியும் குழந்தைகள்

பாலியல் தொழிலாளி மற்றும் பிச்சைக்காரர்களின் குழந்தைகள்

பிச்சை எடுக்கும் குழந்தைகள்

பெற்றோரால் புறக்கணிக்கப்பட்ட, துரத்தப்பட்ட குழந்தைகள்


தொலைந்து போன குழந்தைகள்

வீட்டை விட்டுத் துரத்தப்பட்ட குழந்தைகள் அல்லது வீட்டை விட்டு ஓடிப்போன குழந்தைகள்

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள்


எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்


இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட பெற்றோர் இல்லாத குழந்தைகள்

இப்படிக் குழந்தைகளை அடையாளம் கண்டு 1098 என்ற எண்ணில் தொடர்புகொண்டு போதுமான தகவல்களை அளித்தால், அந்தக் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பைக் குழந்தைகள் பாதுகாப்பு மையம் மேற்கொள்ளும்.

குழந்தைகளின் விருப்பத்துக்கு ஏற்ப பள்ளிக்கூடத்துக்கு அனுப்புதல், பெற்றோரிடம் சேர்த்து வைப்பது, குழந்தை மையங்களில் பாதுகாப்பாக விடுதல் போன்ற முடிவுகளை அரசின் சமூக நலத்துறை, தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, இந்த மையம் குழந்தைகளைப் பாதுகாத்து வருகிறது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?