தென் தமிழக மக்களுக்கு நிவாரண தொகை அறிவித்த முதல்வர் - எந்தெந்த மாவட்டத்துக்கு எவ்வளவு?  Twitter
தமிழ்நாடு

தென் தமிழக மக்களுக்கு நிவாரண தொகை அறிவித்த முதல்வர் - எந்தெந்த மாவட்டத்துக்கு எவ்வளவு?

"சென்னை வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு கொடுத்த 450 கோடி தமிழகத்துக்கு வழக்கமாக கொடுக்க வேண்டிய நிதி தானே தவிர அது நிவாரணத் தொகை அல்ல. சென்னையில் மட்டும் 1500 கோடி ரூபாயை தமிழக அரசு செலவு செய்துள்ளது" - மு.க.ஸ்டாலின்

Antony Ajay R

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.

அவர் பேசியதாவது,

"17, 18ம் தேதிகளில் கனமழை பெய்யும் என்று 17ம் தேதிதான் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட பல மடங்கு அதிகமாக மழை பெய்திருக்கிறது. இது வரலாற்றில் இதுவரை இல்லாதது.

ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததை மக்கள் அறிவார்கள். காயல்பட்டினத்தில் 94 செ.மீ. மழை பெய்து அந்த பகுதியே வெள்ளக் காடாக மாறியது.

150 ஆண்டுகள் இல்லாத மழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் நிலைமை மிக மோசமாக உள்ளன." எனப் பேசினார்.

மேலும் முதல்வர் ஸ்டாலின் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ரூபாய் 6000 நிவாரணமாக அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட மக்களுக்கு ரூபாய் 1000 நிவாரணம் அறிவித்தார்.

மேலும் முதல்வர், சென்னை வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு கொடுத்த 450 கோடி தமிழகத்துக்கு வழக்கமாக கொடுக்க வேண்டிய நிதி தனே தவிர அது நிவாரணத் தொகை அல்ல.

சென்னையில் மட்டும் 1500 கோடி ரூபாயை தமிழக அரசு செலவு செய்துள்ளது என்றும் கூறினார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?